தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சபரிமலை மண்டல பூஜை நிறைவு

Go down

சபரிமலை மண்டல பூஜை நிறைவு Empty சபரிமலை மண்டல பூஜை நிறைவு

Post  meenu Thu Feb 07, 2013 5:15 pm

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

நேற்று நண்பகல் 12 மணிக்கு ஐயப்பனுக்கு களாபாபிஷேகம் நடந்தது. முன்னதாக பகல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் 18ஆம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர்.

ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட பிறகு, தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி தலைமையில் மண்டல பூஜை நடந்தது.

ஐயப்பனக்கு தங்க அங்கி அணிவிக்கும்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய சுவாமியே சரணம் ஐயப்பா என்ற ஒலி விண்ணை முட்டியது.

பின்னர் 1 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தீபாராதன¨, புஷ்பாபிஷேகப் பூஜைகள் நடைபெற்று அரிவராசனத்திற்குப் பிறகு இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.

இதோடு இந்த ஆண்டு மண்டல காலம் நிறைவடைந்தது. தொடர்ந்து பக்தர்கள் மலை இறங்கினர்.

அடுத்த 3 நாட்கள் கோயில் நடை அடைக்கப்பட்டு இருக்கும்.

மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மாலை நடை திறக்கப்படும். அன்று காலையில் இருந்தே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum