அமெரிக்காவில் கட்டப்பட்ட சுவாமி நாராயணன் கோயில் திறப்பு
Page 1 of 1

வாஷிங்டன் : அமெரிக்காவில் 100 மில்லியன் டாலர்(ரூ.540 கோடி) செலவில் கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய சுவாமிநாராயணன் கோயில் திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட் நகர் உள்ளது. இந்த நகரில் மிகப் பெரிய இந்து கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீஅக்ஷார் புருஷோத்தம சுவாமி நாராயணன் சாஸ்தா(பிஏபிஎஸ்) என்ற அமைப்பின் சார்பில் இந்த சுவாமி நாராயணன் கோயில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 35000 இத்தாலி மார்பிள் மற்றும் இந்தியாவில் தயாராகும் செங்கல் கொண்டு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இது பற்றி, பிஏபிஎஸ் அமைப்பினர் கூறியதாவது:
இந்த கோயில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. 122 தூண்கள், 129 ஆர்ச் கொண்ட இந்த கோயில், பூகம்பத்தால் பாதிக்கப்படாது. மேலும், இங்கு சூரிய ஒளியில் மின்சக்தி தயாரிக்கப்படுவதால், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு உகந்ததாக உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் உருவான கோயிலில் இந்திய பாரம்பரியப்படி அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
இதற்கு இந்து மக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சிறந்த கலாச்சார மையமாகவும் இது விளங்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் 23ம் தேதி இந்த கோயிலின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சினோ ஹில் மேயர் பீட்டர் ரோஜர்ஸ் கலந்து கொண்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

» மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு
» மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
» சென்னை அருகே எம்ஜிஆருக்கு ரசிகர்கள் கட்டிய கோயில் திறப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum