சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க
Page 1 of 1

Never Share These Things With Your Partner
எந்த விசயத்தையும் யாரிடம் எதற்காக சொல்கிறோம் என்பது இருக்கிறது. காதலிப்பவர்களாகட்டும், திருமணமானவர்களாகட்டும் தங்களுக்குள் எந்த ஒரு ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி இருப்பதால் பல பிரச்சனைகள் வரக்கூடும். குடும்ப வாழ்க்கையிலும் சில ஒளிவு மறைவுகள் இருந்தால்தான் சிக்கல்கள் இன்றி இருக்கும். காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் மனைவியானவர் தங்கள் கணவரிடம் சில விசயங்களை மறைக்கத்தான் வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். என்னென்ன விசயங்களை மறைக்கவேண்டும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். படியுங்களேன்.
பேஸ்புக் அக்கவுண்ட்
பேஸ்புக் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. அந்த பேஸ்புக்கின் மூலம் நிறைய பேர் நண்பர்கள் ஆவார்கள். எந்த ஒரு ஆணும் தன் துணைவிக்கு ஆண் நண்பர் இருப்பதையும், ஒரு பெண்ணும் தன் துணைவனுக்கு பெண் நண்பர் இருப்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே தனது கணவருக்கு பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்டு மறைப்பதில் தவறில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
மெசேஜ் சாட்டிங்
நண்பர்களுடன் இணையதளத்திலோ, மொபைலிலோ சாட் பண்ணும் போது, அதைப் பற்றி தங்கள் வாழ்க்கைத்துணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனெனில் இதுவே சில சமயங்களில் கணவரின் மனதில் தவறான எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும். பின்னர் அதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆபத்தாகிவிடும். ஆகவே அதைப் பற்றி பேசாமல் இருந்தால் நலம்.
நண்பர்களின் போன் நம்பர்
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை நம்பலாம், அதற்காக நண்பர்களின் மெபைல் நம்பர் தருவது சில சமயங்களில் ரொம்ப ரிஸ்க். ஏனென்றால் நண்பர்கள் விளையாட்டாக ஏதாவது பேச, சில சமயம் அது வினையாக மாறிவிடும். நாம எல்லாரையும் நம்பலாம், ஆனா கண்மூடித்தனமா நம்பக் கூடாது. இதுல ரொம்பவே கவனமா இருக்கணும்.
மறைத்த தகவல்கள்
தெரிந்தோ, தெரியாமலோ முதலில் நாம் செய்த தவறை பற்றி கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் அவர்களுக்கு உண்மையாக இருந்தால், இதைப் பற்றி சொல்லாமல் இருக்கிறோம் என்று கவலை கொள்ள வேண்டாம். மீறி கூறினால், வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும். ஆகவே இவற்றை பற்றி பகிர்வதைத் தவிர்க்கவும்.
வாழ்க்கையானது இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் ஒரு சில விஷயங்களை மறைப்பதில் தவறில்லை. ஆகவே, மேலே சொன்ன எல்லாவற்றையும் கணவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிட்ட பொம்மன்
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» எலி கிட்ட இருந்து கிரைண்டரை காப்பாத்துங்க
» எப்படிப்பட்ட கணவர் அமைவார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum