எலி கிட்ட இருந்து கிரைண்டரை காப்பாத்துங்க
Page 1 of 1

கிரைண்டர் என்பது இன்றைக்கு அனைவரின் வீட்டிலும் அவசியமான பொருளாகிவிட்டது. மாவு அரைப்பது மட்டுமல்லாது, சப்பாத்தி மாவு பிசைவது, தேங்காய் துருவுதல் கூட கிரைண்டரில் செய்யும் அளவிற்கு அதன் வசதிகள் அதிகரித்து விட்டது. கிரைண்டரை வாங்குவதோடு கடமை முடிந்து விடுவதில்லை. அதை நன்றாக பராமரிக்க வேண்டும்.
கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும். அப்பொழுதுதான் அதிக மாவு கிடைக்கும்.தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும். கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் மெத்து மெத்தென்று பூப்போல இருக்கும்.
கல் பாலீஸ்
கிரைண்டர் வாங்கி வருடக்கணக்கில் ஆனால் கல் வழு வழுப்பாகிவிடும். இதனால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.
கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.
கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடும். தள்ளுப்பலகை கையைப் போல வேலை செய்யும் எனவே அதனை பத்திரமாக பராமரிக்க வேண்டும்.
துரு ஜாக்கிரதை
கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.
குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.
டேபிள் டாப் கிரைண்டரில் இந்த தொந்தரவு இல்லை என்றாலும் மாவு ஆட்டி முடித்த உடன் கிரைண்டரை நன்றாக கழுவி சுத்தம் செய்து எண்ணெய் போடவும். அப்பொழுதுதான் துரு ஏறாமல் பாதுகாப்பாக இருக்கும்.
எலி கடிக்கும்
கிரைண்டர் அதிகம் பாதிக்கப்படுவது எலிகளால்தான். எலிகள் ஒளிந்து கொள்ள வசதியான இடம் என்பதால் எலிகளிடம் இருந்து கிரைண்டரை பாதுகாக்க வேண்டும்.
சில சமயங்களில் எலி ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.
கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும். பெல்ட் லூசானால் கிரைண்டர் மாவு அரைக்க அதிக நேரமாகும். எனவே பெல்ட்டை கவனித்து புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘வில்லனிடமிருந்து’ மகளைக் காப்பாத்துங்க – பாக்யாஞ்சலி தந்தை புகார்
» கிட்ட பொம்மன்
» சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க
» பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க
» எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum