தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவானி சங்கமேஸ்வரர் கோவில்

Go down

பவானி சங்கமேஸ்வரர் கோவில் Empty பவானி சங்கமேஸ்வரர் கோவில்

Post  amma Sun Jan 13, 2013 2:31 pm

தமிழகம் முழுவதும் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் ஒரு சில கோவில்களை மட்டுமே பரிகார ஸ்தலங்களாக முன்னோர்கள் வகுத்துள்ளனர். மனிதன் செய்யும் பாவம், புண்ணியத்துக்கு ஏற்ப பலன் அருளும் இறைவன் பாவத்தால் ஏற்படும் தோஷங்களை போக்கி கொள்ளவும், சில கோவில்களில் அருள் பாலிக்கிறான்.

அவ்வாறு சிறப்பு பெற்ற கோவிலாக விளங்குவது ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி, பவானி, அமுதநதி கூடும் இடத்தில் அமைந்த சங்கமேஸ்வரர்- வேதநாயகி கோவில் ஆகும். இந்த கோவில் தலவிருச்சகம் இலந்தை மரமாகும். இந்த மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பவானி கூடுதுறை சங்கமம் பாவங்களை வேரோடு களையும் தன்மை பெற்றது ஆகும். இங்குள்ள அரசமரத்தடியில் உள்ள விநாயகர் வினை தீர்க்கும் வல்லமை வாய்ந்தவராக உள்ளார். அவருக்கு கூடுதுறை நீரை எடுத்து அபிஷேகம் செய்தால் திருமணம் கைக்கூடும் என்பதால் கன்னி பெண்கள் கூடுதுறையில் நீராடி விநாயகருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

பவானி கூடுதுறை பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி கொண்டதாக விளங்குவதால் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் அங்கு நீராடி பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். இங்கு ஒருமுறை குளித்து சென்றால் அவர் முக்தி அடைந்து விடுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

எனவே, அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இறந்தவர்களை தகனம் செய்த அஸ்தியை பவானி கூடுதுறையில் கரைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் இங்குள்ள அமுத லிங்கேஸ்வரர் குழந்தை வரம் அருளும் தாயுள்ளம் கொண்டவர் ஆவார். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது கிடைத்த அமுத கலசத்தைதான் இங்கு முனிவர்கள் சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.

குழந்தை இல்லாத தம்பதிகள் கூடுதுறையில் நீராடி ஈரத்துணியுடன் வந்து அமுத லிங்கேஸ்வரரை வணங்குகின்றனர். பின்னர் குழந்தை வரம் வேண்டும் பெண்கள் இடுப்பில் அமுத லிங்கேஸ்வரரை குழந்தைபோல் தூக்கி வைத்து கொண்டு ஆவுடையை மூன்று முறை வலமாக வருகிறார்கள்.

இப்படி செய்யும் தம்பதிக்கு மழலை செல்வம் நிச்சயம் கிடைக்கும். இது மட்டுமின்றி சகல தோஷ பரிகார ஸ்தலமாகவும் பவானி சங்கமேஸ்வரர் கோவில் கருதப்படுகிறது. எனவே, அனைத்து தோஷ பரிகாரங்களுக்கும் இங்கு தினமும் பக்தர்கள் வந்து வழிபாடு செய்கிறார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum