அதிகாலையில் வாந்தி, மயக்கமா?-கங்கிராட்ஸ், சுட்டிக் குழந்தை பிறக்கப் போகுது!!
Page 1 of 1

கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகாலை நேரத்தில் ஏற்படும் வாந்தி, மயக்கம் குழந்தைக்கு நல்லது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. இத்தகைய சங்கடங்களை சந்திக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அறிவாளிகளாக இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு தாய்மை அடைந்துள்ள பெண்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
கருவை பாதுகாக்கும்
கர்ப்பகாலத்தில் காலை நேரத்தில் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து அமெரிக்காவில் 121 தாய்மார்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாய்மைக் காலத்தில் நிகழும் ஹார்மோன் வெளியேற்றமே இந்த “மார்னிங் சிக்னெஸ்" எனப்படும் சிக்கல்களுக்குக் காரணம் எனவும், இது கருவையும், கருப்பையையும் பாதுகாக்கும் நிகழ்வு எனவும் ஆய்வாளர்கள் மருத்துவ விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏற்படும் அன்னைக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும் பெருமளவில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இதயநோய் வராது
தாய்மைக் காலத்தின் முதல் பாகத்தில் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அசௌகரியங்களைச் சந்திக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கிறது இந்த ஆராய்ச்சி. தலை சுற்றல், வாந்தி , மயக்கம் எல்லாமே ஆரோக்கியமான தாய்மையின் அடையாளங்கள் எனவும், இத்தகைய அறிகுறிகள் காணப்படும் பெண்களின் குழந்தைகள் இதயம் தொடர்பான நோய்கள் வருவதிலிருந்து தப்புகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சுட்டிக் குழந்தைகள்
குழந்தைகளுடைய மூன்றாவது வயது மற்றும் ஏழாவது வயதில் இந்த சோதனைகளை நடத்தப்பட்டன. இதில் தாய்மைக்காலத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்த தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளை விட தாய்மைக்காலத்தில் கஷ்டப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் படு சுட்டிகளாக இருந்தனராம்.சரளமாகப் பேசுவது, சிறு சிறு கணிதங்களைச் செய்வது என நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தாய்மைக் காலத்தில் பல சிக்கல்களை கடந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆய்வு முடிவு. இனி வாந்தி, மயக்கம் வரும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவாற்றல் விருத்தியடைகிறது என நினைத்து அன்னையர் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கங்கிராட்ஸ்! ஜிம்மி கர்ப்பமாயிருச்சு, புரோட்டின் உணவு கொடுங்க!
» ஐஸில் நடந்தால் வலி போகுது!
» பறந்துப் போகுது குட்டி யானை
» சுட்டிக் குழந்தைகளை அழகுபடுத்த எளிய வழிகள்
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum