தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐஸில் நடந்தால் வலி போகுது!

Go down

ஐஸில் நடந்தால் வலி போகுது!         Empty ஐஸில் நடந்தால் வலி போகுது!

Post  ishwarya Wed Feb 27, 2013 1:49 pm

நாற்பதைக் கடந்தாலே போதும்... அதன் பிறகு நான்கு படிக்கட்டைக் கூட கடக்க முடியாதபடி வந்து ஒட்டிக் கொள்கிறது ‘மூட்டுவலிப் பிரச்னை’. வலி மறக்க எடுக்கும் மாத்திரைகள் தரும் தீர்வைவிட, பக்க விளைவுகள்தான் பக்காவாக இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வாகத்தான் கிரையோதெரபியை முன் வைக்கிறது லேட்டஸ்ட் டெக்னாலஜி. கிரையோதெரபி என்றால் வேறொன்றும் இல்லை... எளிமையான 3 நிமிட நடைப்பயிற்சிதான். ஆனால் நடைப் பயிற்சி எடுக்க வேண்டிய இடம், -110 டிகிரி வெப்பநிலை நிலவும் ஒரு ஜிலீர் அறை.

‘‘எங்காச்சும் அடிபட்டா, காயம்பட்ட இடத்துல ஐஸ் கட்டி வைக்கறதைப் பார்த்திருப்பீங்க இல்லையா? அதுதான் இந்த சிகிச்சையோட அடிப்படை’’ என்று இன்ட்ரோ கொடுக்கிறார் முழு உடல் கிரையோதெரபியை இந்தியாவுக்கு அறிமுகம் செய்திருக்கும் சென்னை சௌந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரவி சுப்ரமணியன்.

‘‘உடலின் வெளிப்பகுதியில ஐஸ் பட்டதுமே, அந்த இடத்திலுள்ள சில சென்சார்கள் அதிவேகமா இயக்கப்படும். சாதாரண நிலையில 15 முதல் 20 அதிர்வுகளை அந்த சென்சார்கள் உண்டாக்கும்னா, ஐஸ் உடம்பில் படுறப்ப அவை உண்டாக்கும் அதிர்வுகள் சுமார் 150 வரை இருக்கும். இந்த அளவுக்கதிகமான அதிர்வாலதான் அந்தப் பகுதியில நிலவுகிற வலி தெரியறதில்ல. தற்காலிகமா வலி தெரியாம இருக்க, இந்த ஐஸ்கட்டி ட்ரீட்மென்ட் ரொம்ப காலமா இருக்கு. மூட்டுவலி பிரச்னை பரவலானப்பதான் இதுல அடுத்தகட்டமா கிரையோதெரபியை கண்டு பிடிச்சாங்க.

இந்த கிரையோதெரபியைப் பொறுத்தவரை, மூட்டு வலியை கடுமையான குளிர் மறக்கடிச்சுடும். வலியைப் பொறுத்துக்கிட்டு நாம செய்ய வேண்டிய நடைப்பயிற்சியை, வலியே இல்லாம சுலபமா இங்கே செய்யலாம். ஸோ, இது தற்காலிகமான தீர்வா இல்லாம, ஓரளவு நல்ல பலனை உலகம் முழுக்க தந்துக்கிட்டிருக்கு. இந்தியாவுல ‘ஆர்த்ரைடிஸ்’னு சொல்லப்படுற மூட்டுவலி வீரியமா தாக்க ஆரம்பிச்சு பல வருஷமாகிட்ட நிலையில, இப்பதான் நம்ம மக்களுக்கு இந்த சிகிச்சை கிடைக்கப் போகுது’’ என்கிறார் ரவி சுப்ரமணியன். இங்கு இயங்கும் -110 டிகிரி ஜில் பகுதிக்குப் பெயர் ‘மெட் ஸ்பா’.

‘முழு உடல் கிரையோதெரபி’ எனப்படும் இந்தச் சிகிச்சையை கை, கால், மூட்டு மற்றும் உடம்பு வலி இருக்கும் எவரும் எடுத்துக் கொள்ளலாம். உரிய கவசங்களுடன் சிகிச்சைக்காக உள்ளே நுழைபவர்களை வெளியிலிருந்து மருத்துவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே நுழைவதற்கு முன்பாகவும் ஒரு மருத்துவப் பரிசோதனை அவசியம். இது தவிர, அறையினுள் ஏதாவது பிரச்னை என்றால் உள்ளே இருக்கும் எமர்ஜென்சி பட்டனை அழுத்தினால், அறை தானாகத் திறந்து விடுகிறது. மூட்டுவலி மட்டுமில்லாது, தோல் சார்ந்த சில பிரச்னைகளையும், ஆஸ்துமாவையும் கூட இந்த சிகிச்சை மூலம் சரி செய்யலாம் என்கிறார்கள்.

தொடர் சிகிச்சை எடுக்கிறபோது சுத்தமாக வலி தெரியவில்லை எனவும், சென்சார்களின் செயல்பாடு வலியைக் குறைப்பதோடு, சோர்வை நீக்கி மூளையை புத்துணர்வாக்குவதாகவும் சொல்கிறார்கள் ‘மெட் ஸ்பா’ சிகிச்சை எடுத்த சிலர். ஜெர்மனி நாட்டு வல்லுனர்களைக் கொண்டு இயங்கும் இந்த ‘மெட் ஸ்பா’ சிகிச்சைக்கு கட்டணம்... 3 நிமிட நடைக்கு 2 ஆயிரம் ரூபாயாம். ஆனால், நாளாக ஆக குறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் மருத்துவமனை தரப்பில்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடந்தால் சுறுசுறுப்பு விர்ர் கொழுப்பு போயே போச்சு
» அதிகாலையில் வாந்தி, மயக்கமா?-கங்கிராட்ஸ், சுட்டிக் குழந்தை பிறக்கப் போகுது!!
»  ‘அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடும்’ என்கிறார்களே, உண்மைதானா?
» நடந்தால் சுறுசுறுப்பு விர்ர் கொழுப்பு போயே போச்சு
» நடந்தால் சுறுசுறுப்பு விர்ர் கொழுப்பு போயே போச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum