சுட்டிக் குழந்தைகளை அழகுபடுத்த எளிய வழிகள்
Page 1 of 1

Kids Make Up
குழந்தைகள் நடமாடும் தேவதைகள். போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்து தமது திறமையை நிரூபிக்க குழந்தைகள் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது.
வீட்டுக்குள் இருக்கும் போதே கண்ணாடியைப் பார்த்து தானாக அழகு படுத்திக்குகொள்ளும் சுட்டிகள், மேடையில் ஏறினால் கேட்கவா வேண்டும் மேக்கப் போடச் சொல்லி பெற்றோரை பாடாய் படுத்தி எடுத்தி விடுவார்கள். அழகுக்கு அழகுபடுத்த தேவையில்லைதான் என்றாலும் ஊர்வலத்தின் போது அந்த அம்பிகையையே அலங்காரம் செய்து தானே அழைத்து வருகின்றனர்.
மேடையில் நடனம்தான் முக்கியம் என்றாலும் குழந்தையின் ஆடை ஆலங்காரத்தோடு, மேக்அப் மற்றும் சிகை அலங்காரம் மிகவும் முக்கியமானதாகும். குழந்தைகளுக்கு ஒப்பனை செய்வது என்பது ஒரு வித்தியாசமான கலை. அதிகமானாலோ, குறைந்துபோனாலே அசிங்கமாக தெரியப்போவது நமது தேவதைகள்தான். எனவே குழந்தைக்கு மேக்அப் கையாளவேண்டிய 8 வழிமுறைகள் இங்கே கூறப்பட்டுள்ளது.
சுத்தம் சுகாதாரம்
முகத்திற்கு மேக்அப் போடும் போது சுத்தத்தில் கவனம் கொள்ள வேண்டும். ஒருநாள்தானே என்று தரமில்லாத பொருளை வாங்கி மேக் அப் போடுவதால் பாதிப்பு ஏற்படுவது என்னவோ குழந்தையின் முகத்திற்குதான். கூடுமானவரைக்கும் அடுத்தவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களை வாங்கி உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
குழந்தைகளை ஓரிடத்தில் அமைதியாக அமரவைத்து தலைமுடியில் உள்ள சிக்கல், முடிச்சுகளை நீக்கிபின் நன்றாக தூக்கி போனிடெய்ல் போட்டுக்கொள்ள வேண்டும். முதலில் முகம், கழுத்து மற்றும் காதின் பின்புற பகுதிகளில் குழந்தையின் நிறத்தைவிட மங்கிய நிறத்தில் வண்ணம் பூசி அதற்கு மேல் பவுடரை அளவாக பூச வேண்டும். பவுடர் அதிகமாக இருந்தால் துடைத்து எடுக்க வேண்டும். பின் முகத்திலிருந்து காது வரை ப்ளஸரை பூச வேண்டும்.
கண்ணுக்கு மை அழகு
உதடுகளும், கண்களும்தான் முகத்தின் அழகை எடுப்பாக காட்டும் பகுதிகள். அங்கு மேக்கப் போடும் போது அதீத கவனம் செலுத்த வேண்டும். ப்ரவுன் நிறத்திலான கண்மையினை மெதுவாகவும் மிருதுவாகவும் கண் இமையின் வெளிப்புறமும், ஓரத்திலும் பூச வேண்டும். ஜிகினா கொண்டு கண் இமையை அலங்கரித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.ஐலைனர் பயன்படுத்தி கண்ணைச் சுற்றி கோடு வரைந்தால் அது கண்ணை பெரிதாகவும் அழகாகவும் காட்டும். உதட்டில் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பில் லிப்ஸ்டிக் வரைந்தால் அது மிகவும் நன்றாக இருக்கும். ரோஸ் நிற உதடுகளை உடைய சுட்டிகளுக்கு லிப் கிளாஸ் பயன்படுத்தினாலே போதுமானது.
புத்தம் புதிய ஆடைகள்
சிகையலங்காரம் மற்றும் முக ஒப்பனை முடிந்தவுடன் சரியான விதத்தில் கழுத்திலும் காதிலும் நகைகள் அணிவிக்க வேண்டும். ஆடைகள் புதியவையாக இருக்கட்டும் அப்பொழுதுதான் மேடையில் பளிச்சென்று தெரிவார்கள்.
நடனம் மற்றும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது மேற்கண்ட முறைகளை பின்பற்றி மேக் அப் செய்தால் நமது குழந்தைகளின் அழகு அள்ளிக் கொண்டு போகும். அப்புறம் வீட்டுக்கு வந்து திருஷ்டி சுத்திப்போட மறந்துடாதீங்க.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொழுப்பைத் தவிர்க்கும் எளிய வழிகள்
» முகப்பரு மறைய எளிய வழிகள்
» கோபத்தை கையாள எளிய வழிகள்
» மனஅழுத்தத்தை விரட்டும் எளிய வழிகள்.
» 'அசிடிட்டி' யை குணப்படுத்தும் எளிய வழிகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum