சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர் : மண்டல கால பூஜை கோலாகலமாக முடிந்தது
Page 1 of 1

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மண்டல பூஜை கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும் மண்டல கால பூஜை, கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் துவங்கியது. 41 நாள் நடைபெற்ற இந்த மண்டல கால பூஜை நேற்றுடன் நிறைவடைந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, கடந்த 22ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை சன்னிதானத்தை அடைந்தது. தொடர்ந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.
நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. 3.20 மணியளவில் நெய்யபிஷேகம் தொடங்கியது. 10 மணியுடன் நெய்யபிஷேகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்டுக்கடங்காத கூட்டத்தால் நெய்யபிஷேகம் 11 மணி வரை நீட்டிக்கப்பட்டது. பிறகு, மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கின. 12.30 மணிக்கு பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடந்தது. ஒரு மணி வரை நடந்த மண்டல பூஜைக்கு பின்னர் கோயில் நடை சாத்தப்பட்டது.
மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் நடந்தது. இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் நடை சாத்தப்பட்டது. இதையடுத்து, இவ்வருட மண்ட கால பூஜைகள் நேற்றுடன் முடிவடைந்தன. மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேத¤ மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இன்று முதல் வரும் 29ம் தேதி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று சன்னிதானத்தில் தொடங்கி பம்பை வரை பக்தர்களின் வரிசை காணப்பட்டது. இதனால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிறு குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வருமானம் குறைந்தது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் வரை மொத்த வருமானம் ரூ.110 கோடியை தாண்டி உள்ளது என்று தேவசம் போர்டு தலைவர் கோவிந்தன்நாயர் கூறினார். இது குறித்து அவர் சபரிமலையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைந்துள்ளது. இந்த ஆண்டு மண்டல கால பூஜையை முன்னிட்டு நடை திறந்த 40 நாளில் கோயிலின் மொத்த வருமானம் ரூ.110 கோடியை தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.114 கோடியாக இருந்தது’’ என்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர் : மண்டல கால பூஜை கோலாகலமாக முடிந்தது
» திருச்செந்தூரில் இன்று மாசித் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum