காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
Page 1 of 1

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. கடந்த 6-ஆம் தேதி கருடசேவை உற்சவம் நடந்தது. முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை 4 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு காந்தி சாலையில் உள்ள தேர் நிற்கும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டு தேரில் வைக்கப்பட்டார்.
வரதராஜப் பெருமாளுக்கு அர்ச்சகர்கள் தீபாராதனை நடத்தினர். அப்போது வானவெடிகளும், பட்டாசுகளும் வெடித்தன. அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷமிட்டது வானையும் பிளந்தது.
அதிர்வேட்டுகள் வெடிக்க, பக்தர்கள் கோஷமிட தேர் புறப்பட்டது. கச்சபேஸ்வரர் கோவில், 4 ராஜ வீதிகள் சங்கரமடம் வழியாக தேர் சென்றது. சிறிது தூரம் வரை பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பின்னர் இயந்திரம் மூலம் தேர் இழுத்துச் செல்லப்பட்டது.
சங்கரமடம் வழியாக தேர் சென்றபோது காஞ்சி சங்கராச்சாரியார்களும் சாமி கும்பிட்டனர். பின்னர் தேர் பூக்கடை சத்திரம், ரெட்டை மண்டபம் வழியாக காந்திரோட்டில் உள்ள நிலையை அடைந்தது.
இந்த தேரோட்டத்தை காண வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
» வரதராஜ பெருமாள் கோயிலில் பாரி வேட்டை
» ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum