ஆரோக்கியமான...கீரை கட்லெட்!!!
Page 1 of 1
ஆரோக்கியமான...கீரை கட்லெட்!!!
குழந்தைகளுக்கு கீரை என்றால் பிடிக்காது. ஏனெனில் அதை சரியாக சுவையாக சமைத்துக் கொடுக்காததே காரணம். ஆகவே குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்து தர ஒரு வழி இருக்கிறது. அது தான் கீரை கட்லெட். சரி, அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
முளைக்கீரை 1 கட்டு
கடலை மாவு 12 கப்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிதளவு
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம், கீரை, பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய கீரை, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி வைத்துவிடுங்கள்.
பிறகு கீரையில் இருக்கும் நீரை வடிகட்டி விட்டுங்கள். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, கொத்தமல்லி, வேண்டுமென்றால் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதோடு கீரையையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு இந்த கலவையை வதக்கிய கீரையுடன் சேர்த்து சிறு தீயில் நன்கு கிளறவும்.
இந்த கீரை கலவையானது சுருண்டு வரும் போது அதனை இறக்கி, ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தவும். பின் ஆறியதும் துண்டாக வெட்டி அதனை அப்படியே சாப்பிடலாம்.
வேண்டுமென்றால் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அந்த துண்டுகளை தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி நன்கு பொன்னிறமாகும் வரை புரட்டி எடுத்து சாப்பிடலாம்.
இப்போது சுவையான கீரை கட்லெட் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum