தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முளைக்கீரை கட்லெட்

Go down

முளைக்கீரை கட்லெட் Empty முளைக்கீரை கட்லெட்

Post  ishwarya Fri Mar 15, 2013 12:57 pm

தேவையான பொருட்கள் :

முளைக்கீரை - 1 கட்டு
கடலை மாவு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய்- 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

• கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• குக்கரை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய கீரை, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி கீரையில் இருக்கும் நீரை வடிகட்டி விட்டு கீரைரயை மட்டும் தனியாக வைக்கவும்.

• பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, கொத்தமல்லி, வேண்டுமென்றால் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதோடு கீரையையும் சேர்த்து வதக்க வேண்டும்.

• பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

• அடுப்பில் இந்த கலவையை வைத்து (மிதமான தீயில்) கிளறி அத்துடன் கீரையையும் சேர்த்து நன்கு கிளறவும்.

• இந்த கீரை கலவையானது சுருண்டு வரும் போது அதனை இறக்கி, ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.

• பின் ஆறியதும் துண்டாக வெட்டி அதனை அப்படியே சாப்பிடலாம்.

• மிகவும் சத்தான, ஆரோக்கியமான முளைக்கீரை கட்லெட் ரெடி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum