சுவையான இறால் மீன் வறுவல்
Page 1 of 1
சுவையான இறால் மீன் வறுவல்
கடல் உணவுகளிலேயே மிகவும் சுவையானதும் நல்ல கொழுப்புச் சத்துக்களும் இறாலில் உள்ளன. மேலும், கால்சியம், புரதம், அயோடின் போன்ற சத்துக்களும் இறாலில் உள்ளதால் இதனை உண்ண மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் பி12, டி போன்றவையும், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் போன்றவையும் இறாலில் காணப்படுகின்றன. இறால் வறுவல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.
இறால் 1/2 கிலோ
சின்னவெங்காயம் 50 கிராம்
பச்சை மிளகாய் இரண்டு
இஞ்சிப் பூண்டு விழுது 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் 1 டீஸ் பூன்
மல்லித்தூள் 1/2 டீஸ் பூன்
மஞ்சள் தூள் 1/2 டீஸ் பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 2 டீஸ் பூன்
கடுகு உளுந்து, கறிவேப்பிலை தாளிக்க சிறிதளவு
இரால் வறுவல் செய்முறை
முதலில் சின்னவெங்காயம், பச்சை மிளகாயை மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதனுடன் அரைத்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இதனுடன், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறால் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து தீயை குறைந்த அளவில் வைத்து சிவக்கும் வரை வறுக்கவும். நாவில் நீர் ஊறச்செய்யும் இரால் வறுவல் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுவையான இறால் மீன் வறுவல்
» இறால் வறுவல்
» இறால் குடமிளகாய் வறுவல்
» செட்டிநாட்டு இறால் வறுவல்
» சமையல்:இறால் குடமிளகாய் வறுவல்
» இறால் வறுவல்
» இறால் குடமிளகாய் வறுவல்
» செட்டிநாட்டு இறால் வறுவல்
» சமையல்:இறால் குடமிளகாய் வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum