ஈஸியான...பிரட் உப்புமா
Page 1 of 1
ஈஸியான...பிரட் உப்புமா
தற்போது அனைத்து வீடுகளிலும் விரைவில் செய்து முடிக்கக்கூடிய டிஷ்களில் ஒன்று தான் உப்புமா. இந்த உப்புமாவை காலை உணவாகவோ அல்லது மதிய உணவாகவோ சாப்பிடலாம். அதிலும் உப்புமாவை பல வழிகளில் செய்யலாம். அதில் ஒன்று தான் ரவையை வைத்து செய்வது. இது பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் செய்வது தான். ஆனால் இப்போது இந்த உப்புமாவில் ரவையோடு, பிரட் மற்றும் காய்கறிகளை சேர்த்து, நன்கு கலர் புல்லாக சுவையாக சமைத்து சாப்பிடலாம். அந்த பிரட் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Bread Upma
தேவையான பொருட்கள்:
ரவை (வெள்ளை அல்லது கோதுமை) - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கேரட் - 2 (நறுக்கியது)
குடை மிளகாய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன் (வேக வைத்தது)
பிரட் துண்டுகள் - 10 (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும் )
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 6
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, வாணலி சூடானதும் அதில் ரவையை போட்டு, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைக்கவும்.
இப்போது மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலையை போட்டு, வறுக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தை போட்டு, 1 நிமிடம் வதக்கி, நறுக்கிய குடை மிளகாய், கேரட் போட்டு, நன்கு வேகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் பச்சை மிளகாய், வேக வைத்த பட்டாணி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். நன்கு வதக்கியப் பின் மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
சிறிது நேரம் கழித்து, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு, நன்கு வதக்க வேண்டும். பின் அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் பிரட் துண்டுகளை போட்டு, தண்ணீர் நன்கு சுண்டும் வரை, கிளற வேண்டும். தண்ணீர் சுண்டியதும், அதை இறக்கவும்.
இப்போது சுவையான பிரட் உப்புமா ரெடி!!!
பின்னர் அதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறவும். அதிலும் இதனை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈஸியான...பிரட் ரோல்
» ரக்சா பந்தன் ஸ்பெஷல்!!! ஈஸியான... பிரட் பர்பி
» சுவையான... ஈஸியான... இட்லி உப்புமா
» பிரட் தோசை
» பிரட் போண்டா
» ரக்சா பந்தன் ஸ்பெஷல்!!! ஈஸியான... பிரட் பர்பி
» சுவையான... ஈஸியான... இட்லி உப்புமா
» பிரட் தோசை
» பிரட் போண்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum