ரக்சா பந்தன் ஸ்பெஷல்!!! ஈஸியான... பிரட் பர்பி
Page 1 of 1

வட இந்தியாவில் ரக்சா பந்தன் என்னும் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழா தற்போது தென்னிந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், தங்கைகள் அண்ணன்களுக்கு ராக்கிகளை கட்டிவிட்டு, தங்கள் அன்பை தெரிவித்து வருவார்கள். அவ்வாறு ராக்கிகளை கட்டும் போது, அதோடு வீட்டிலேயே ஈஸியாக ஒரு இனிப்பை செய்து அண்ணன்களுக்குக் கொடுத்தால், இந்த நாள் மிகவும் இனிமையானதாக இருக்கும் அல்லவா!!! ஆகவே அத்தகைய மிகவும் விரைவில் செய்யக்கூடிய, ஈஸியான ஒரு இனிப்பு தான், பிரட் பர்பி. சரி, அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
பிரட் தூள் - 2 கப்
பால் - 1 கப்
முந்திரி - 10
வெல்லம் - 100 கிராம்
தேங்காய் - 1/2 கப்
ரோஸ் வாட்டர் - சிறிது
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் பிரட் தூளை பாலில் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைக்கவும். நீண்ட நேரம் இதனை ஊற வைக்க வேண்டாம். இல்லையென்றால் வதங்கி போய்விடும்.
அந்த 10 நிமிடத்திற்குள், வெல்லத்தை ஒரு வாணலியில் போட்டு, தீயை குறைவாக வைத்து நன்கு கரைக்கவும். வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் விடலாம்.
எப்போது வெல்லம் மென்மையாக, சற்று அடர்த்தியாக வரும் போது, துருவிய தேங்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறவும்.
இப்போது அந்த பிரட் தூள் மற்றும் பாலை ஊற்றி, நெய் சேர்த்து தொடர்ந்து கிளறவும். அவ்வாறு கிளறும் போது, நெய் கலவையிலிருந்து தனியாக பிரியும் நேரத்தில் சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் முந்திரி பருப்புகளை போட்டு ஒரு முறை கிளறி இறக்கவும்.
இறக்கியப் பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடானது ஓரளவு போனப் பின், அதனை வேண்டிய வடிவத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளலாம்.
இப்போது ரக்சா பந்தனுக்கு சுவையான பிரட் பர்பி ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈஸியான...பிரட் ரோல்
» ஈஸியான...பிரட் உப்புமா
» 'குழந்தைகள் தின ஸ்பெஷல்' - பிரட் அல்வா!!!
» சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு பர்பி
» ரவா பர்பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum