சேமியா வெஜிடேபிள் கிச்சடி
Page 1 of 1
சேமியா வெஜிடேபிள் கிச்சடி
திங்கட்கிழமை என்றாலே காலையில் எழுந்து சமைக்க சோம்பேறித்தனமாக இருப்பதோடு, என்ன சமைக்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கும். அப்போது கவலைப்படாமல், எளிதில் சமைக்கக்கூடியதும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும் சேமியா மற்றும் காய்கறிகளை வைத்து ஒரு உப்புமா போன்று கிச்சடி செய்யலாம். இப்போது அந்த கிச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
பீன்ஸ் - 4 (நறுக்கியது)
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 5
பிரியாணி இலை - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நீரை கொதிக்க விடவும். அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து, கொதிக்கும் நீரில் அந்த சேமியாவைப் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, இறக்கி மூடி தனியாக வைத்து கொள்ளவும். (முக்கியமாக சேமியா குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.)
பின் நீரை வடித்து, ஒரு தட்டில் அந்த சேமியாவை பரப்பி, குளிர வைக்கவும். பின் மற்றொரு வாணலியில் நீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு, வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதோடு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் வேக வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மசாலா அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு கிளறவும்.
மசாலா அனைத்து காய்கறிகளுடன் ஒன்று சேர்ந்ததும், அதில் சேமியாவைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டால் வாணலியை மூடி 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
இப்போது சுவையான சேமியா வெஜிடேபிள் கிச்சடி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, தயிருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடேபிள் சாண்ட்விச்
» வெஜிடேபிள் சாண்ட்விச்
» வெஜிடேபிள் கட்லட்
» பன்னீர் வெஜிடேபிள் சாலட்
» வெஜிடேபிள் பாஸ்தா சூப்
» வெஜிடேபிள் சாண்ட்விச்
» வெஜிடேபிள் கட்லட்
» பன்னீர் வெஜிடேபிள் சாலட்
» வெஜிடேபிள் பாஸ்தா சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum