வெஜிடேபிள் பாஸ்தா சூப்
Page 1 of 1
வெஜிடேபிள் பாஸ்தா சூப்
தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 1/2 கப்
காய்கறிகள் - தேவையான அளவு (கேரட், பீன்ஸ், பட்டாணி அல்லது விருப்பமான காய்கறிகள்)
பாஸ்தா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2
பூண்டு - 3 பற்கள்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
• வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• காய்கறிகளை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• முதலில் காய்கறிகளை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
• ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, பாஸ்தாவை போட்டு, உப்பு சேர்த்து, பாஸ்தா வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி, நீரை வடிகட்டி, பின் அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
• பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, வேக வைத்த காய்கறிகளை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும். பின்பு அதில் பாஸ்தா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
• காய்கறிகள் சாஸ் உடன் சேர்த்து ஒரு பதத்திற்கு வந்ததும், அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
• பின் இறுதியில் அதில் சோள மாவு சேர்த்து, கெட்டியாக வரும் வரை நன்கு கிளறி சூப் போன்று வரும் போது, அதனை இறக்கி, அதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாறினால், அருமையான வெஜிடேபிள் பாஸ்தா சூப் தயார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum