தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுலபமான பர்ஃபி

Go down

 சுலபமான பர்ஃபி Empty சுலபமான பர்ஃபி

Post  ishwarya Thu Feb 21, 2013 5:31 pm

கடலை மாவு -1 கப், சர்க்கரை -2 கப், சர்க்கரை இல்லாத பால் கோவா -அரை கப், நெய் -அரை கப், அலங்கரிக்க முந்திரி -10, திராட்சை -சிறிது.
அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், கடலை மாவைத் தூவி வாசனை வரும்வரை பொரித்துக் கொள்ளவும். ஆறியதும் உதிர்த்த கோவாவை அதனுடன் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். 1 டீஸ்பூன் பால் விட்டு, சர்க்கரையில் உள்ள அழுக்கை அகற்றவும். பாகு கம்பிப் பதம் வரும் போது, பொரித்து வைத்துள்ள மாவை ஒரு கையில் தூவிக் கொண்டு, மறு கையால் கலவையை கிளறவும்.

நுரைத்து வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி, சமன்படுத்தி, துண்டுகள் போடவும். பிறகு முந்திரி, திராட்சையால் அலங்கரிக்கவும்.

அவசரமாக ஒரு பிரசாதம் செய்து கடவுளுக்கு படைக்க நினைப்போருக்கு, இது சுலபமானது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum