மட்டன் பன்னீர் குருமா!!!
Page 1 of 1
மட்டன் பன்னீர் குருமா!!!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லீம் வீடுகளிலும் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என்று வீட்டில் சுவையாக சமைத்து சாப்பிடுவோம். அதிலும் அப்போது வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதோடு, அவர்களுக்கு ருசியாக அசத்தும் வகையில் அந்த பிரியாணியோடு, மட்டன் பன்னீர் குருமாவை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது அந்த மட்டன் பன்னீர் குருமா செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
கொத்துக்கறி - 1/4 கிலோ
பன்னீர் - 100
கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் பன்னீர் துண்டுகளை அதில் நனைத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் கொத்துக்கறியை நன்கு கழுவி, அத்துடன் சேர்த்து தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
ஆவி போனப் பின் குக்கரை திறந்து அந்த கொத்துக்கறியை கிளறிவிட்டு, மறுபடியும் அடுப்பில் வைத்து, பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு முறை வதக்கி, தேங்காய் பாலை விட்டு, சற்று கெட்டியானதும், அதனை இறக்கி விடவும்.
பின் அதன் மேல் கொத்தமல்லி இலையை தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின்னர் பரிமாறவும். இப்போது சுவையான மட்டன் பன்னீர் குருமா ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum