பன்னீர் ரோல்
Page 1 of 1
பன்னீர் ரோல்
பால் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அத்தகைய பால் பொருட்களை வைத்து எந்த ஒரு ரெசிபி செய்தாலும், சுவையாக இருக்கும். இப்போது அதில் பன்னீரை வைத்து குழந்தைக்கு பிடித்த வகையில் ஒரு ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவர். அந்த பன்னீர் ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 2 கப் (துருவியது)
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து மசித்தது)
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் வெங்காயம், பன்னீர், மிளகாய் தூள், மிளகு தூள், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் உப்பு போன்றவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து மைதா மாவை சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவே கலந்து வைத்துள்ள கலவையை வைத்து சுருட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, அதில் சுருட்டி வைத்துள்ள மைதாவைப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பன்னீர் ரோல் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum