வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
Page 1 of 1
வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
நெல்லை சந்திப்பு வீரராகவபுரத்தில் சுமார் 800 ஆண்டு பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மூலவராக வீரராகவ பெருமாள் காட்சி அளிக்கிறார். உற்சவமூர்த்தியாக வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, ஆண்டாளுடன் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் தனி சன்னதியில் சக்கரத்தாழ்வார் காட்சி அளிக்கிறார்.
சக்கரத்தாழ்வாருக்கு மிகவும் உகந்தநாள் திருக்கார்த்திகையாகும். ஜோதி வடிவாக ஜ×வாலை ரூபத்தில் காட்சி அளிக்கும் சக்கரத்தாழ்வார் நவகிரகங்களின் அதிபதியான சூரியனை விட கோடிமடங்கு பிரகாசம் உடையவர். சக்கரத் தாழ்வாருக்கு தீபத்திருநாளான திருக்கார்த்திகையன்று "சுதர்சன ஜெயந்தி'' கொண்டாடப்படுகிறது.
அன்று சுதர்சன ஹோமம் சக்கரத்தாழ்வார் சன்னதி முன்பு நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தில் பங்கேற்றால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். திருமணம், குழந்தை பேறு, வெற்றி, சகலதோஷம் நீங்கி சகல பலன்களும் கிடைக்கும். மேலும் புதன்கிழமையும் சக்கரத்தாழ்வாருக்கு ஏற்ற கிழமையாகும்.
புதன் கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் `நிரஞ்சனம்' தீபம் ஏற்றி சக்கரத்தாழ்வாரை வழிப் பட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும். மேலும் இந்த கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு தங்ககவசம் அணிவிக்கப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஒவ்வொரு திருக்கார்த்திகையன்று சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு ஹோமங்களில் சிறந்ததாக கருதப்படும் சுதர்சன ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை வழிபடுவார்கள். குறிப்பாக பெண் பக்தர்கள் ஏராளமானோர் அன்று கலந்து கொள்வார்கள்.
மேலும் இந்த கோவிலில் தாயார் மகாலட்சுமி, ஆண்டாள், ஆஞ்சநேயர், கருடன் ஆகியோர் தனி சன்னதிகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். மேலும் 4 ஆழ்வார்கள், நவநீதகிருஷ்ணன், ஆதிஷேசன் ஆகியோர் ஒரே சன்னதியில் காட்சி தருகிறார்கள்.
அரிசியில் தேங்காயை உடைந்து அதில் நெய்ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவதே "நிரஞ்சனம் தீபம்'' ஆகும். இந்த தீபத்தை ஏற்றி சக்கரத்தாழ்வாரை பெண்கள் வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்று இந்த கோவிலின் சக்கரத்தாழ்வார் தனி சன்னதி அர்ச்சகர் மாதவன் பட்டாச்சாரியார் தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வரதராஜ பெருமாள் கோவில்
» ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
» ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
» ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
» ஸ்ரீகிருஷ்ண பெருமாள் கோவில்
» ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
» ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
» ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
» ஸ்ரீகிருஷ்ண பெருமாள் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum