பிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு தீர்வு
Page 1 of 1
பிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு தீர்வு
முகத்தில் எடுப்பாக தெரிவது மூக்குதான் மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள்தான். ஒரு சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். கடைகளில் விற்கும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது.
ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான். வீட்டிலேயே பேஷியலுக்கு செய்வதுபோல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.
மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் மறைந்து விடும். மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை கெடுக்கிற விஷயம்தான்.
சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் கிடைக்கும். அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை குறைவு.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிளாக் ஹெட்ஸ் போக வேண்டுமா?
» முகத்தின் அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்
» தம்பதியர்களிடையே பிரச்சனைக்கு தீர்வு
» பெண்கள் பிரச்சனைக்கு தீர்வு...
» மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
» முகத்தின் அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்
» தம்பதியர்களிடையே பிரச்சனைக்கு தீர்வு
» பெண்கள் பிரச்சனைக்கு தீர்வு...
» மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum