தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மெகா மகளிர் விருதுகள்!

Go down

மெகா மகளிர் விருதுகள்!  Empty மெகா மகளிர் விருதுகள்!

Post  meenu Thu Mar 28, 2013 12:47 pm

மகளிர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் 12 பேருக்கு மெகா டி.வி சார்பில் மகளிர் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய மந்திரி கே.வி. தங்கபாலு மற்றும் மெகா டி.வி.யின் மேலாண்மை இயக்குநர் திருமதி.ஜெயந்தி தங்கபாலு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தனர். சிறந்த தொழில் முனைவோருக்கான விருது ஏ.எம்.மாலதிக்கும், தமிழ்சேவைக்காக, சரளா ராஜகோபாலனுக்கும், துணிச்சலான செயல்பாட்டுக்கான விருது தீயணைப்புத்துறை உயர் அதிகாரி பிரியா ரவிச்சந்திரனுக்கும், சமூக சேவைக்கான விருது மீனா தாதாவுக்கும், இசைத்துறைக்கான விருது பாடகி வாணி ஜெயராமுக்கும் வழங்கப்பட்டது. இலக்கிய விருது உஷா சுப்பிரமணியனுக்கும், கவிதைத் துறையினருக்கான விருது சல்மாவுக்கும் வழங்கப்பட்டது. தமிழ் நாட்டுப்புற கலைகளுக்கான விருதை அனிதாகுப்புசாமியும், தொழில் சாதனையாளர் விருதை லதா சி.மோகனும் பெற்றுக் கொண்டனர். விளையாட்டுத் துறைக்கான சாதனை விருது அனகா அலங்காமணிக்கும், திரைத்துறையினருக்கான விருதை டப்பிங் கலைஞர் ஸ்ரீ அனுராதாவும் பெற்றுக் கொண்டனர். மாற்றுத்திறனாளியாக பிறந்து கல்விச் சேவையில் சாதித்த கிருத்திகாவுக்கும் விருது வழங்கப்பட்டது. விரைவில் இந்த நிகழ்ச்சி மெகா டிவியில் ஒளிபரப்பாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு: இந்தியாவில் தயாரான 'லைப் ஆப் பை' படத்துக்கு 4 விருதுகள்
» நாளை 58-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா – தமிழுக்கு 14 விருதுகள்!
» 2012-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு: 3 தமிழ்ப் படங்களுக்கு 5 விருதுகள்
» ஜனவரி 7 – கோலிவுட் மெகா ஸ்ட்ரைக்!
»  வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum