தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லைப் ஆப் பை படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சி: புதுவை மாணவன் பேட்டி

Go down

லைப் ஆப் பை படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சி: புதுவை மாணவன் பேட்டி Empty லைப் ஆப் பை படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சி: புதுவை மாணவன் பேட்டி

Post  ishwarya Sat Mar 16, 2013 1:27 pm

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஆங்லீ இயக்கிய திரைப்படம் ‘லைப் ஆப் பை’. இப்படத்திற்கு சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த விஷ்வல் எபெக்ட் ஆகிய பிரிவுகளில் 4 ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளது.

‘லைப் ஆப் பை’ திரைப்படத்தின் பெரும்பகுதி கேராளவின் மூணாறு மற்றும் புதுவை தாவரவியல் பூங்கா, கீழூர், கடற்கரை, ஆரோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டது. அதோடு இந்த திரைப்படத்தில் கதாநாயகனின் பள்ளி பருவகால தோற்றத்தில் ஒரே சாயலில் இருந்ததால் புதுவை ஆச்சார்யா பள்ளியை சேர்ந்த மாணவன் கணேஷ் கேசவ்வை இயக்குனர் ஆங்லீ டூப்பாக பயன்படுத்தி உள்ளார்.

இன்னும் சில காட்சிகளில் கதாநாயகனுடன் பள்ளியில் பயிலும் சக மாணவராகவும் கணேஷ் கேசவ் நடித்துள்ளார். ‘லைப் ஆப் பை’ படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதால் அந்த படத்தில் நடித்தவர் என்ற முறையில் சக மாணவர்களும் ஆசிரியர்களும், நண்பர்களும் கணேஷ் கேசவ்விற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தான் நடித்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது மாணவன் கணேஷ் கேசவ்வை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனக்கு அந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து கணேஷ் கேசவ் கூறியதாவது:

எனக்கு நாடகம் நடிப்பது, இசை போட்டியில் பங்கேற்பதில் ஆர்வம் அதிகம். ‘லைப் ஆப் பை’ படக்குழுவினர் அந்த படத்தில் மாணவர் பருவத்து காட்சிகளில் நடிக்க பல மாணவர்களை அழைத்தனர். அவர்களுடன் நானும் சென்றிருந்தேன்.

அப்போது கதாநாயகனின் சிறுவயது தோற்றத்தில் நடிக்கும் மாணவரும் நானும் ரெட்டையர்கள்போல் இருந்தோம். இதனால் இயக்குனர் என்னை டூப்பாக நடிக்க வைத்தார். அதோடு என்னை கதாநாயகனின் மாணவ பருவ படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் எல்லாம் அவருக்கு பதிலாக எப்போதும் என்னை தயார்படுத்தி வைத்திருந்தனர். இதனால் புதுவை மற்றும் மூணாறு படப்பிடிப்புகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதுமட்டுமல்லாமல் பள்ளி காட்சிகளில் நானும் சக மாணவனாகவும் தோன்றினேன். ஏற்கனவே நான் நாடகங்களில் நடித்திருந்தது சினிமாவில் நடிக்கும்போது உதவியாக இருந்தது. எனக்கு விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே விருப்பம். இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடிப்«பன். குறும்படம் ஒன்று தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு மாணவன் கணேஷ் கேசவ் கூறினான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
» விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகர் மகேஷ்பாபு பேட்டி
» 4 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற லைப் ஆப் பி படம்
»  திருமதி தமிழ்' படத்துக்கு வரி விலக்கு: தேவயானி மகிழ்ச்சி
» ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு: இந்தியாவில் தயாரான 'லைப் ஆப் பை' படத்துக்கு 4 விருதுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum