ஸ்படிகமாலை எப்போது அணிய கூடாது?
Page 1 of 1
ஸ்படிகமாலை எப்போது அணிய கூடாது?
அழகை எடுத்துக் காட்டுவதற்காகவே நகைகள் அணிகின்றோம். உடலில் பதிநான்கு இடங்களில் அணியும் நகைகளுக்கு ஆறு முக்கிய நன்மைகள் உண்டு. அழகு, தெய்வப்பிரியம்,ஆத்தும தரிசனம்,ஆரோக்கிய இரட்சை,ஸதானக் குறிப்பு,தோஷ நிவாரணம் என்ற நன்மைகளுக்காகவே நகைகள் அணிகின்றோம். பதிநான்கு உலோகங்களின் சின்னமாக தலையிலும், நெற்றியிலும்,காதிலும், மூக்கிலும் உதட்டிலும் கழுத்திலும், தோளிலும், புஜத்திலும், கையிலும், மார்ப்பிலும், இடுப்பிலும், பாதங்களிலும், கால்விரலிலும், கைவிரலிலும், நகைகள் அணிவதுண்டு. தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே ஸ்படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு. இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து ஸ்படிக மாலையை தண்ணீர் பாலில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி. எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும். இரவு வேளை இம்மாலையை தண்ணீரில் இட்டுவைத்து மறுநாள் அத்தண்ணீரைக் குடித்தால் ஆண்மை விருத்தியடையும் என்று நம்புகின்றனர். பௌர்ணமி நாள் ஸ்படிகமாலை அணிந்தால் உடல் சக்தி கூடும் என்றும் தம்பதிகள் இம்மாலை அணிந்து தூங்கக் கூடாதென்றும் விதிக்கப்பட்டுள்ளன. ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும் தான்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ருத்ராட்சத்தை எப்போது அணிய வேண்டும்?
» எப்போது தரிசனம் கூடாது?
» வெள்ளை வெளேல் என்று இருப்பவர்கள் சில விஷயங்களை செய்யவேக் கூடாது. அதாவது அவர்கள் நிறத்திலேயே வெள்ளையாக இருப்பதால் அதிகமாக பவுடர் பூசிக் கொள்ளக் கூடாது. அப்படி செய்யும் போது அவர்களது அழகை பவுடர் குலைத்து விடும். அதேப்
» கை வளையல் அணிய இதோ??
» மின்னும் தங்க நகை அணிய வேண்டுமா?
» எப்போது தரிசனம் கூடாது?
» வெள்ளை வெளேல் என்று இருப்பவர்கள் சில விஷயங்களை செய்யவேக் கூடாது. அதாவது அவர்கள் நிறத்திலேயே வெள்ளையாக இருப்பதால் அதிகமாக பவுடர் பூசிக் கொள்ளக் கூடாது. அப்படி செய்யும் போது அவர்களது அழகை பவுடர் குலைத்து விடும். அதேப்
» கை வளையல் அணிய இதோ??
» மின்னும் தங்க நகை அணிய வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum