குளியல் மற்றும் கழிவறை
Page 1 of 1
குளியல் மற்றும் கழிவறை
ஒரு வீட்டில் கழிவறை குளியலறை எங்கு அமைக்க வேண்டுமென வாஸ்து ரீதியாக பார்த்தால் ஒரு வீட்டில் தென் கிழக்கு, தெற்கு பகுதி கிழக்கை ஒட்டிய தெற்கு பகுதி வடமேற்குப் பகுதி, மேற்கு பகுதியில் வடக்கை ஒட்டிய பகுதியில் கழப்பறை, குளியலறை அமைக்கலாம். பொதுவாக தென் மேற்கு பகுதியிலும் வடகிழக்கு பகுதியிலும் கழிவறை குளியலறை அமைக்க கூடாது. குறிப்பாக தென் கிழக்கு அல்லது வடமேற்கில் தான் கழிவறை குளியலறை அமைக்க வேண்டும். கழிப்பறையில் கழிவு பொருட்கள் செல்ல கூடிய தொட்டியானது எப்படி அமைக்க வேண்டுமென்றால் ஒருவர் கழிவறையை உபயோகிக்கும் போது தெற்கு அல்லது வடக்கு பார்த்து அமர்வதுப் போல அமைக்க வேண்டும். கண்டிப்பாக சூரியன் உதிக்கும் திசையான கிழக்குப் பார்த்தும் சூரியன் உதிக்கும் திசைக்கு எதிர்புறமான மேற்கு திசையிலும் கழிவறையில் அமர்வதும் போல் இருக்க கூடாது.
குறிப்பாக படுக்கையறைக்கு ஒட்டியவாறு கழப்பறை அமைக்கும் போது கூட அந்த படுக்கை அறைக்கு தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் உள்ள பகுதியில் தான் அட்டாச்டு பாத்ரூம் அமைக்க வேண்டும். கண்டிப்பாக வடகிழக்கு தென்மேற்கில் அமைக்கக் கூடாது. பொதுவாக வடகிழக்கு திசையானது ஈசனே குடியிருக்க கூடிய தெய்வீக ஸ்தானம் என்பதினால் அங்கு கழிப்பறை அமைப்பதும் செல்வத்தை குவிக்கும் ஸ்தானமான தென்மேற்கு திசையிலும் கழிவறை அமைக்க கூடாது. கழிவறைக்கு ஒட்டியது போல பூஜையறை இருக்க கூடாது. அது போல தலைவாசலுக்கு நேராகவும், படிக்கட்டுக்கு கீழும் கழிவறை இருக்க கூடாது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum