குளிர்ச்சி குளியல்
Page 1 of 1
குளிர்ச்சி குளியல்
"ஏய்ய... பிடி... பிடி... பிடி... ஆங் இதோபிடிச்சுட்டேன்" குழந்தைகள் முன்னால் ஓட அம்மாவோ, பாட்டியோ துரத்தி வர... வாரா வாரம் வீட்டுக்குள் ஒரு சின்னப் போராட்டமே நடக்கும்.
பிடிபட்டவுடன் தலைநிறைய எண்ணெய் அப்பி மசாஜ் செய்து டிரம்ஸ் வாசிப்பத போல விரல்களால் தலையில் ஒரே தாளகதியில் தட்டுவார்கள். தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிக்கும் தினத்துக்கான இந்தக் களேபரங்கள் எல்லாம் இப்போது ரொம்பவே குறைந்து போய்விட்டன.
இன்றைய அவசர உலகத்தில் ஒரு மணி நேரம் தலையிலும் உடம்பிலும் எண்ணெய் வழிந்தபடி உட்கார்ந்திக்க பலரால் முடிவதில்லை. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் அவசியம் பற்றியும் நிறையப்பேருக்குத் தெரிவதில்லை. வாரம் முழுக்க சேரும் உஷ்ணத்தை எல்லாம் நீக்கி, உடம்பைக் குளிர்ச்சியாக்கும் என்பதற்காகத்தான் நம் பாட்டிக்ளும் அம்மாக்களும் எண்ணெய் தேய்த்து குளிப்பதைக் கட்டாயமாக வைத்திருந்தார்கள். உடல் உஷ்ணம் அதிகமாகச் சந்தர்ப்பங்கள் உள்ள இன்றைய தினக்ஙளில் எண்ணெய்க் குளியல் இன்னும் எவ்வளவு அவசியம் என்று யோசித்துப் பாருங்கள். (டூவீலர் பயணம், வெயிலில் சுற்றுதல், சத்துள்ளதை விட்டுவிட்டு ஃபாஸ்ட் ஃபுட்டுக்கு மாறிவிட்ட சாப்பாட்டு முறை என்று நம் உடல் சூட்டை அதிகப்படுத்த இன்று எத்தனையோ காரணங்கள்.
எண்ணெய்க் குளியல், நம் உடம்பில் என்னென்ன அற்புதங்களைச் செய்யும் என்று பார்ப்போமோ? சூடு குறைந்து உடல் நார்மலுக்கு வரும். தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கேசப் பகுதியில் ஆக்ஸிஜனும் குளுகோஸூம் அதிகமாகக் கிடைக்கும். டென்ஷனும் கோபமும் ஏற்படுத்தும் விஷயங்கள் தினசரி எத்தனையோ நடக்கின்றன. அந்த நிகழச்சிகளை தடுக்க முடியாது என்றாலும் அவற்றால் உஷ்ணம் ஏற்படுவதை எண்ணெய் மசாஜ் குறைத்துவிடும். முக்கியமாக முடி உதிர்வது குறைந்து சீக்கிரமே நரைமுடி ஏற்படாமல் தடுக்கும்.
சிலருக்கு உடலில் ஒருவித வறட்சித் தன்மை ஏற்படும். எண்ணெய்க் குளியலால் இது நீங்கிக் குற்றாலத்தில் குளித்து வந்ததுபோல் 'ஜில்'லென்று ஆகிறது.
தலைக்கு எண்ணெய் விட்டு மசாஜ் செய்து குளித்தால் உடம்பு முழுவதுமே மசாஜ் செய்த பலன் கிட்டும். உடம்பின் அத்தனை நரம்புகளும் ஒன்றுசேரும் தலைமைச்செயலகம் தலைதானே!
இது தவிர ஹார்மோன் சுரப்பு, மூளை, செல்களின் வளர்ச்சி என்று மேலும் பலன்களை லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குளியல் குளியல் குளியல்
» எண்ணெய் குளியல் ஏன்?
» குளியல் மற்றும் கழிவறை
» எண்ணெய் குளியல்
» எண்ணெய் குளியல்
» எண்ணெய் குளியல் ஏன்?
» குளியல் மற்றும் கழிவறை
» எண்ணெய் குளியல்
» எண்ணெய் குளியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum