தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம் Chennai வியாழக்கிழமை, நவம்பர்

Go down

 வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம் Chennai வியாழக்கிழமை, நவம்பர் Empty வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம் Chennai வியாழக்கிழமை, நவம்பர்

Post  ishwarya Sat Feb 02, 2013 12:15 pm


ஓம் நமோ பகவதே
சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

இதை அனுதினமும் முருகன் திருவுருமுன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரகிக்கப்படும் மந்திரமாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபனம் செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் காட்சி கிட்டும் என `மாலா மந்திரம்' என்னும் பழங்காலத்து நூல் தெரிவிக்கிறது.

மந்திரம் என்பதற்கு மன்னும் திறம்- நிலை பெற்றிருக்கும் திறன் என்று பொருள் கொள்ளலாம். யந்திரம் என்பது மந்திர சக்தி நிலைத்திருந்து இயங்கச் செய்யும் கருவி. புலனடக்கத்தோடு இறைவனை மனதில் இருத்தி உள்ளும் புறமும் நிலை நிறுத்திப் பூஜிப்பது யந்திரமுறை. யந்திரங்கள் இறைவனின் மறுவடிவாகவே போற்றப்படுகின்றன.

யந்திரங்கள் எனப்படும் சக்கரங்கள் காகிதத்தில் வரையப்பட்டு கண்ணாடிச் சட்டத்திற்குள் வைக்கப்பட்டோ, மரம் அல்லது உலோகத்தில் கீறல்களாகச் செதுக்கியோ பயன்படுத்தப்படுகிறது. இச்சக்கரங்கள் தியானத்தின்போது மனதை ஒரு நிலைப்படுத்தப் பயன்படுகிறது. முருக வழிபாட்டில் அறு கோணச்சக்கரம் பயன்படுத்தப்படுகிறது.

இச்சக்கரத்தில் சம அளவுள்ள இரண்டு சம பக்க முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நேர் எதிர் திசையில் படியுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு முக்கோணங்களுக்கு நடுவில் அமைந்துள்ள புள்ளி உயிர்சக்தியாக- கந்தன் எனக்கொள்ளப்படுகிறது. இதைத் சுற்றியுள்ள தனிவட்ட வளையங்களில்- உள்வட்டத்தில் ஆறு தாமரை இதழ்களும், வெளி வட்டத்தில் பன்னிரண்டு தாமரை இதழ்களும் வரையப்பட்டிருக்கும்.

அவற்றை சுற்றி பூபுரம் எனப்படும் மூன்று சம இடைவெளியுடன் நான்கு பக்கங்களிலும் மூன்று சதுரங்கள் வரையப்பட்டிருக்கும். பூபுரம் என்ற வெளிச்சுற்று சதுரச் சுவர்களிலிருந்து தொடங்கி, படிப்படியாக உள்ளடங்கி மனதை கட்டுப்படுத்தி, மைய ஈர்ப்பு புள்ளியுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டால், தாம் விரும்புவது எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

முருகனுக்கு `சரவணபவ' என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது வசியம், ஆகர்ஷணம், மோகனம், தம்பனம், உச்சாடனம், மாரணம் என்னும் ஆறு வகையான பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. வழிபாட்டு மந்திரத்தின் எழுத்துகளை முறை மாற்றி உச்சரிப்பதன் மூலம் விளைவுகள் வேறுபட்டதாயிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஷடாட்சர மந்திரத்திற்கான யந்திரத்தை அமைக்க குறுக்கும் நெடுக்குமாக ஏழுகோடுகள் வரைந்தால் 36 சிறு கட்டங்கள் கிடைக்கும். அந்தந்த காரியங்களுக்கான வகையில் அந்த கட்டங்களில் எழுத்துகளை எழுதி, அவற்றிற்குரிய கோச மந்திரங்களும் குறிக்கப்படும். (அட்டவணை காண்க). இவைவெவ்வேறு முறைகளிலும் எழுதப்படும்.

இந்த மந்திரங்களை ஆறு வகையான பணிகளுக்கான மரப்பலகைகளில் எழுதி வைத்து, 1008 முறை உச்சரிப்பதன் மூலம் விரும்பிய பலனைப்பெறலாம். வசியத்திற்கு வில்வ மரத்திலும், ஆகர்ஷணத்திற்கு வெண் நாவல் மரத்திலும், மோகனத்திற்கு அலரி மரத்திலும், தம்பனத்திற்கு ஆல மரத்திலும், உச்சாடனத்திற்கு பலா மரத்திலும், மாரணத்திற்கு வில்வ மரத்திலும் எழுதுவதே பலனளிக்கக் கூடியதாம்.

சில மந்திரங்களை பீஜத்தோடும் சிலவற்றை கோசத்தோடும் உச்சரிக்க வேண்டும். தேவையான பீஜ.கோசங்களை சேர்த்து மந்திரங்களை உச்சரிப்பதே பலன் தரும். மனனம் செய்பவனை ரட்சிப்பது மந்திரமாகும். மெய்ஞ்ஞானிகள் மந்திர ஜபத்தால் செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்திருக்கிறார்கள்.

மந்திரங்களை முறையாக உச்சரிப்பதால் அதற்குரிய தேவதையின் திருவுருவம் சூட்சும வடிவில் உபாசகனின் முன் தோன்றுகிறது. மந்திர உச்சாடனம் செய்வதன் மூலம் சூட்சும சலனங்கள் ஏற்படுத்தி விரும்பிவற்றை அடைவதோடு இறைவன் திருவுருளையும் பெற முடியும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம் Chennai வியாழக்கிழமை, நவம்பர்
»  Chennai வியாழக்கிழமை, நவம்பர் 22, 1:00 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மனம் விரும்பிய மணாளன் கிடைப்பார் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் தில்லாபுரி அம்மன் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழம
» வரம் தரும் விரதங்கள்
» வரம் தரும் விரதங்கள்
» வரம் தரும் விரதங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum