தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆயுளை அதிகரிக்கும் குண்டலினி யோகா

Go down

ஆயுளை அதிகரிக்கும் குண்டலினி யோகா Empty ஆயுளை அதிகரிக்கும் குண்டலினி யோகா

Post  ishwarya Fri Feb 01, 2013 4:55 pm

அது என்ன குண்டலினி... யோக மார்க்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் மிக முக்கிய அங்கமாக ``யோகம்'' இருக்கிறது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள்.

யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள். இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் ``சிலை'' படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.

ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றது தான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும்.

அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போது தான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

7 சக்கரங்கள்.......

சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதில் உள்ள புரதம், கொழுப்பு எதுவாயினும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் புராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.இந்தப் புராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70 ஆயிரம் நாடிகள் வழியாகப் பாய்கிறது.

இந்த 70 ஆயிரம் நாடிகளும் 7 முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் 7 சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள் (சக்கரங்கள்). இந்த 7 சக்கரங்கள் தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த 7 சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.

1. மூலாதாரம்:

அந்தரங்க பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம் தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படையான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.

2. சுவாதிஷ்டானம்:

இது அந்தரங்க பகுதிக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

3. மணிப்பூரகம்:

இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

4. அனாகதம்:

இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது?

5. விசுக்தி :

இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும். (ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்தப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப்பட்டிருப்பதை குறிக்கவோ என்னவோ, யாருக்குத் தெரியும்ப)

6. ஆக்கினை:

இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம் தான்.

7.சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்):

இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம் தான். இந்தக் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது. (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹாரம் தூண்டப்பட்ட நிலையைக் குறிக்கவே) (சக்கரங்களோடு சேர்த்து பஞ்சபூதத் தத்துவத்தை இங்கே விளக்க இயலாது. அதில் கேள்வி, குழப்பம் இருப்பின் பின்னாளில் விளக்கம் தரப்படும்.)

சக்கரங்களை தூண்டுவது எப்படி?.

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அறைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். வெகுசிலர் தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படிப அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும். பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு கொண்டு வரும் போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது என்கிறார் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பிரபல ஜோதிடர் கீழஈரால் பண்டிதர் பச்சை ராஜென்.

செய்முறை.....

* குண்டலினி யோகாவை ஆசிரியரிடம் பயிற்சி பெறாமல் செய்யக்கூடாது.

* முதலில் மூலபந்த நிலையில் உட்கார வேண்டும்.

* அந்த நிலையிலேயே சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.

* பின்னர் சுவாதிசுடானம், மனிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை ஆகிய ஒவ்வொரு சக்கரங்களிலும் எண்ணத்தை நிறுத்தி சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.

* கடைசியாக துரியத்தில் எண்ணத்தை நிலைப்பெறச் செய்ய வேண்டும்.

* உயிர் சக்தியைத் துரியம் அல்லது ஆக்கினையில் நிலைபெறச் செய்வதே குண்டலினி யோகம் எனப்படும்.

ஞாபகசக்தி அதிகரிக்கும்........

குண்டலினியால் பேரின்பம் பெற்று அனுபோக முறைப்படி கவனித்து வந்தால், ஐந்து அல்லது பத்தாண்டிற்குள் தன்னுடைய வயதைக் கூட்டிக் கொள்ளத் தனக்கு வல்லமை ஏற்பட்டு விடுகிறது. ஏழைக்கும் அரசனுக்கும் ராஜ தனவந்த எளியோர்களுக்கும் நிம்மதி நிலை ஊட்டும் சக்தி குண்டலினி.

நம் கன்னத்தைத் தொட்டு முத்தமிட்டுக் கொள்ளும் உணர்ச்சியால் அன்பு, உடன்பாடு ஆகிய ஒற்றுமையும் மோவாய்க்கட்டை, தாடியைத் தொட்டுத் தாங்கும் உணர்ச்சியால் சாந்தமும், அமைதியும், மீசையைத் தொட்டு முறுக்கி விடும் உணர்ச்சியால் சாந்தமும், அமைதியும், மீசையைத் தொட்டு முறுக்கி விடும் உணர்ச்சியால் மூர்க்கமும், வீரமும், கோபமும் ஏற்படுவது போல், பிடரி, நெற்றி, உச்சி இவைகளினுள் நமது உயிரணு என்னும் குண்டலினி உணர்ச்சி பட்டவுடன் முறையே ஞாபக சக்தி, ஆராய்ச்சி, நிதானம், வீரம், தைரியம், பேரறிவு, பேரின்பம் ஆகியவை நாளுக்கு நாள் மிகுதியாகின்றன.

இதன் மூலம் மனித ஆயுள் அதிகரிக்கும். அறிவின் கூர்மையால் நொடிப் பொழுதில் தன்னிலை உணர்தலாகிய ஞானம் அடையலாம். பேரின்ப சுகத்தைத் தன் குண்டலினியால் அடையலாம். குண்டலினியால் பேரின்ப நிலையை அடைவதற்கு பிரம்மச்சரிய விரதம், தனி இடம், ஜெபம், பிராணயாமம் தேவையில்லை சொல்லுகின்ற, கேட்கின்ற நுண்ணறிவும், நுட்பமாக நோக்கும் திறமை இருந்தால் போதுமானது என்கிறார் ஜோதிடர் பண்டிதர் பச்சைராஜென்.

பச்சைராஜென்.போன் - 9941194811

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum