தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் ஆயுர்வேத தெரபி

Go down

மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் ஆயுர்வேத தெரபி Empty மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் ஆயுர்வேத தெரபி

Post  ishwarya Sat May 11, 2013 1:34 pm

வேதம்‘! இந்தியாவில் தோன்றிய சிறந்த மருத்துவ முறைகளில் இதுவும் ஒன்று. பல்வேறு நோய்களுக்கு இந்த மருத்துவமுறையில் ‘ஆயுர்வேத தெரபி’ என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அப்யங்கம்:.மனித உடலுக்குள் முக்கியமான பல உறுப்புகள் இருக்கின்றன. அதில் ஏற்படும் வலிகளைப்போக்க கொடுக்கப்படும் மருத்துவ சிகிச்சை இது. நமது உடலில் 108 வர்ம புள்ளிகள் உள்ளன. அவைகளை பயன்படுத்தி உடலில் எந்த பகுதியில் வலி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

அந்த இடத்தில் பலா அஷ்வகந்தம், ஷரபலா தைலம், தான்வந்தரத் தைலம் போன்ற விதவிதமான தைலங்களை பயன்படுத்தி இந்த அப்யங்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால்வலி, கை வலி, குடைச்சல், முது குவலி போன்ற வலிகள் இதன் மூலம் நீங்கும். இந்த சிகிச்சை, வலியை நீக்குவதோடு உடலுக்கு வலுவையும் சேர்க்கும். அதனால் அப்யங்கம், ‘டூ இன் ஒன்’ சிறப்பை பெறுகிறது.

ஸ்வேதம்: உடலில் அடியோ, வலியோ ஏற்பட்டால் முன்பெல்லாம் வீடுகளில் பாட்டிகள் ஒத்தடம் கொடுப்பார்களே, அந்த அடிப்படையிலான சிகிச்சைதான் இது. உடலில் சூடான ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வியர்வை வெளியேற்றப்பட்டு நோய் குணப்படுத்தப்படுகிறது. இந்த ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தோலில் உள்ள கொழுப்பு குறைக்கப்படும்.

மருத்துவ குணம்கொண்ட மூலிகை இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதிலிருந்து வெளிப்படும் ஆவியை பயன்படுத்தி 10 முதல் 20 நிமிடங்கள் வரை உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பார்கள்.

ஆமணக்கு, மணல், கோதுமை, உப்பு, ஆகியவற்றைப் பயன்படுத்தி உடலில் எண்ணெய்த் தன்மையை அதிகரிக்கச் செய்து, அவற்றை வியர்வை மூலம் வெளியேற்றுவார்கள். இந்த ஒத்தடத்தின் மூலம் மூட்டுவலி நீங்கும். சருமத்திற்கு அதிக பொலிவு கிடைக்கும். உடலுக்கும்-மனதிற்கும் உற்சாகம் பொங்கும். புத்துணர்ச்சிக்கான சிகிச்சை இது.

சிரோதாரா: இது ஒரு கலைநயமிக்க சிகிச்சை. நோயா ளியை மல்லாக்கப்படுக்கவைத்திருப்பார்கள். குறிப்பிட்ட உயரத்தில் மேலே கட்டப்பட்டிருக்கும் பாத்திரத்தில் மூலிகை மற்றும் மருந்துகள் கொண்ட தைலத்தை நோய்த் தன்மைக்கு தக்கபடி தயாரித்து நிரப்பிவைத்திருப்பார்கள்.

அதை நோயாளியின் முன் நெற்றிப்பகுதியில் பொழியச் செய்வார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ச்சியாக அதை செய்வார்கள். இந்த மூலிகை எண்ணெய் தலையில் இருக்கும் மர்மப் புள்ளியில் படுவதால் உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சி கிடைக்கும். மன அமைதியையும் கொடுக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி இதை தொடர்ந்து செய்துவந்தால் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை, கோபம், அமைதியின்மை போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

சிலர் வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். சின்னச் சின்ன பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் பதட்டப்படுவார்கள். அவர்கள் மனம் எதிலும் நிலையாக இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தெரபி உதவும். தெரபியை பெறுகிறவர்கள் பயம், பதட்டத்தில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த தூக்கத்திற்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள்.

தக்ர தாரா: மோர் எல்லோரும் அருந்தக்கூடிய சிறந்த பானம். பருகுவதன் மூலம் உடலுக்குள் செல்லும் இந்த பானத்தை, உடலுக்கு வெளியே கொடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவது இந்த தெரபியின் அடிப்படை. தக்ர என்பதற்கு மோர் என்ற பொருள் உண்டு. மூலிகை கஷாயத்தில் மோரினை கலந்து, அதை மண்பானையில் வைத்து புளிக்கவைப்பார்கள்.

பின்பு தினசரி சிகிச்சைக்கு தேவையான அளவு அந்த கஷாயத்தை எடுத்துபயன்படுத்துவார்கள். மீதி இருந்தால் அவற்றில் தண்ணீர் கலந்து வைப்பார்கள். இந்தக் கலவையில் மேலும் சிலவகை மூலிகைகளை கலந்து உடல் முழுவதும் பூசுவார்கள். தோல் நோய்களுக்கு இதன் மூலம் நிவாரணம் கிடைக்கிறது.

பஞ்ச அம்ல தாரா: எலும்புகள் தேய்ந்து சிதைவது இப்போது பெரும் நோயாக மாறிக்கொண்டிருக்கிறது. பெண்கள் மனோபாஸ் காலத்திற்கு பின்பு இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இடுப்பு எலும்பு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு பலவகையான மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி இந்த தெரபியை வழங்குகிறார்கள். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி எலும்புகள் பலமடைகின்றன.

தைல தாரா: இப்போது ஆண்களும், பெண்களும் அதிக அளவில் பயணங்கள் மேற்கொள்கிறார்கள். அதனால் தசை இறுக்கம் ஏற்பட்டு தாங்க முடியாத வலியால் அவஸ்தைப்படுகிறார்கள். விசேஷமாக தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட வகை மூலிகை எண்ணெய்களை கொண்டு தைல தாரா மசாஜ் செய்வார்கள். அதன் மூலம் வலிகள் தீர்ந்து உடல் உற்சாகம் பெறுகிறது.

கரீவ தாரா:. தலைவலி, தலைசுற்று, முதுகுவலி, முதுகுதண்டுவட பாதிப்பு, கடுமையான உடல்வலி போன்றவைகளால் பாதிக்கப்படுகிறவர்களுக்குரிய தெரபி இது. இதில் மூலிகை எண்ணெய் வகைகளும், தோல் நீக்காத உளுந்தும் முக்கிய மருந்துகளாக பயன்படுகிறது. நோயாளியை குப்புறபடுக்கவைப்பார்கள்.

மூலிகைகளுடன் தோல் நீக்கப்படாத உளுந்தை சேர்த்து அரைத்து மாவுபோல் ஆக்குவார்கள். அதை பின் கழுத்துப் பகுதியில் ஒரு சிறிய தலையணை போல் வட்டமாக அமைப்பார்கள். குழி வடிவத்தில் உருவாக்கப்படும் அதில் மூலிகை எண்ணெய்யை ஊற்றுவார்கள்.

இந்த சிகிச்சையை தொடர்ந்து இரண்டு வாரங்கள் வரை நோய்த்தன்மைக்கு தகுந்தபடி தொடர்வார்கள். படுத்தால் எழுந்திருக்க முடியாமலும், எழுந்தால்படுக்க முடியாமலும் அவதிப்படுகிறவர்களுக்கு இந்த தாரா அதிக பலன் தரும்.

பிருஷ்ட வஸ்தி: கம்ப்யூட்டரில் வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் அடிக்கடி கழுத்து வலி-அதோடு இணைந்த முதுகு வலியால் அவதிப்படுவார்கள். நீண்ட தூர இருசக்கர வாகன பயணம் மேற்கொள்கிறவர்களும் இந்த தொல்லைக்கு உள்ளாகிறார்கள்.

உட்கார்ந்த இடத்திலே வெகு நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் பலருக்கும் இந்த வலி தொந்தரவு உண்டு. அவர்களுக்கு பலனுள்ள சிகிச்சை, பிருஷ்ட வஸ்தியாகும். இந்த சிகிச்சைக்கு தான்வந்தரத் தைலம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதில் பெரும்பாலும் மசாஜ் சிகிச்சையே கையாளப்படும். இந்த வகை மசாஜ் மூலம் உடலில் தசைகள் நெகிழ்ந்து, வலிகள் குறைந்துவிடும். ரத்த ஓட்டமும் சீராகும். இதனால் தசைகளில் உள்ள இறுக்கம் நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஜானு தாரா: இது முழங்கால் மூட்டின் மேல் செய்யப்படும் சிகிச்சை. மூட்டு ஜவ்வு தேய்மானத்தை சரி செய்யும்.

பரிமர்ஜனம்: மருத்துவ குணங்கள் கொண்ட ஏராளமான மூலி கைகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. உடலின் தன்மைக்கு தக்கபடி சில வகை மூலிகைகளை தேர்ந்தெடுத்து, தூளாக்கி, காய்ச்சி அதனை ஒரு சிறிய பந்து போன்று உருவாக்குவார்கள். பின்பு அதனை மூலிகை கஷாயத்தில் ஊறவைப்பார்கள்.

நன்றாக ஊறிய பின்பு அதனை எடுத்து உடலில் குறிப்பிட்ட பாகங்களில் வைத்து மசாஜ் செய்வார்கள். இதனை தொடர்ச்சியாக

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum