உத்திஷ்ட பந்தாசனம்
Page 1 of 1
உத்திஷ்ட பந்தாசனம்
செய்முறை:-
முதலில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். பின்னர் இரண்டு முழங்கால்களையும் மடித்துப் பாதங்களை இரண்டு கைகளாலும் பற்றிக்கொள்ள வேண்டும். இப்போது வசதிப்படி கால்களை உயர்த்தி எளிமையாகச் செய்யும் அளவுக்கு முழங்கால்களை வளைத்துக்கொண்டு மூச்சை வெளியேற்றிவிட்டு முகத்தை இரண்டு முழங்கால் முட்டிகளிலும் பொருத்தவேண்டும். இந்த நிலையில் 10 வினாடிகள் இருந்தால் போதும். பின்னர் கால்களை நீட்டி இளைப்பாறிக்கொண்டு மறுபடியம் இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம்.
பயன்கள்..
இவ்வாசனம் செய்வதால் கால்கள், பாதங்கள், கைகள் ஆகியவற்றின் எலும்புகள், முதுகெலும்பு, முதுகறை எலும்புகள், விலாஎலும்புகள் என்று சகலவிதமான எலும்புகளும் வலிமைபெறுகின்றன. எலும்பு மஜ்ஜை வளம்பெறுகிறது. ஊடம்பிலுள்ள எல்லாத்தசைகளும் இறுக்கமும் திண்மையும் பெறுகின்றன. உடம்பிலுள்ள ஊளைச்சதைகள் கரைகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உத்திஷ்ட பந்தாசனம்
» சேது பந்தாசனம்
» உத்திஷ்ட பிரதிபாதாசனம்
» உத்திஷ்ட உபாங்கபந்தாசனம்
» உத்திஷ்ட உபாங்கபாதாசனம்
» சேது பந்தாசனம்
» உத்திஷ்ட பிரதிபாதாசனம்
» உத்திஷ்ட உபாங்கபந்தாசனம்
» உத்திஷ்ட உபாங்கபாதாசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum