சுந்தரானந்தர் சித்தர்
Page 1 of 1
சுந்தரானந்தர் சித்தர்
சுந்தரானந்தர் யோகத்தில் நீண்ட காலம் அமர்ந்திருந்து சித்துக்கள் பல புரியும் ஆற்றல் பெற்றவர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவரின் குரு சட்டை முனி என்று சதுரகிரி தலப்புராணம் கூறுகிறது.
அபிஷேக பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் சச்சிதானந்த வடிவாகிய சுந்தரானந்த சித்தர் மதுரையம்பதி கடை வீதி, சித்திரக் கூடம், நாற்சாந்தி வீதி, உப்பரிகை போன்ற இடங்களில் திரிந்து பல சித்துகளை விளையாடினார். இந்திரஜாலமாக மறைந்து பெண்ணை ஆணாக்கியும், ஆணை பெண்ணாக்கியும், ஊனமுற்றவர்களை சுகப்படுத்தியும், இரும்பு, செம்புகளை தங்கமாக்கியும் பற்பல ஜாலங்கள் புரிந்தார்.
பாண்டிய மன்னன் சித்தரிடம் ஊர், பேர் முதலியவைகளை கேட்க தாம் பல சித்து விளையாட்டுகளை செய்து காட்டும் சித்தர் என்று கூறினார். அப்பொழுது கையில் கரும்புடன் ஒருவன் வந்தான். அதை கண்ட அரசர் அக்கரும்பை வாங்கி சித்தரிடம் கொடுத்து ``இக்கரும்பை இங்கு கற்சிலையாக நிற்கும் கல்யானையை உண்ணும் படியாக செய்தால் நீங்கள் சித்தர் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்''என்றார்.
சித்தரும் சம்மதித்து கரும்பை கையில் வாங்கி கல் யானையிடம் நீட்டி கண்ணசைத்தார். அனைவரும் பார்த்து கொண்டிருக்கையிலேயே கல்யானை துதிக்கையை நீட்டி கரும்பை வாங்கி உண்டு ஏப்பம் விட்டு பிளிரியது. அரசனும், அனைவரும் அதிசயித்து அன்பும், பக்தியும் பெருக்கெடுக்க சித்தர் திருவடிகளில் வணங்கினர்.நிமிர்ந்த பொழுது யானை மறுபடியும் கல்யானையாக நின்றது.
சித்தரும் கோவிலுக்குள் சென்று மறைந்தார். இவர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சித்தராக சமாதியில் வீற்றிருக்கின்றார். சுந்தரானந்தர் தண்டகம் முதலிய நூல்களை ஏழுதினார். மேலும் பயிதொழில் சம்பந்தப்பட்ட சில நுணுக்கமான விஷயங்களையும்-ஆரூடங்களையும் கூறினார். சுந்தரானந்த சித்தருக்கு நிவேதனமாக கடலை, வெண்பொங்கல் படைத்து இவற்றுடன் மஞ்சள் வஸ்திரம் அல்லது காவி வஸ்திரம் படைத்து வியாழன் அன்று வழிபட வேண்டும்.
நிறைவாக ``ஓம் ஆம் ஊம்'' ஸ்ரீ சுந்தரானந்த சுவாமியே போற்றி! போற்றி! என 108 முறை கூறி வழி படவேண்டும். இவ்வாறு வழிபட்டால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை கள் ஏற்படாது. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.புத்திர பாக்கியம் உண்டாகும்.
குரு பிரீதியடைவார்.புகை பிடித்தல், குடிப்பழக்கம் அகலும். சித்த பிரமை வியாதி குணமாகும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். வறுமை அகன்று வளமான வாழ்வு அமையும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» காலாங்கிநாதர் சித்தர்
» இராமதேவ சித்தர்
» சித்தர் பாடல்கள்
» சித்தர் களஞ்சியம்
» இடைக்காட்டுச் சித்தர்
» இராமதேவ சித்தர்
» சித்தர் பாடல்கள்
» சித்தர் களஞ்சியம்
» இடைக்காட்டுச் சித்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum