இடைக்காட்டுச் சித்தர்
Page 1 of 1
இடைக்காட்டுச் சித்தர்
இடைக்காடர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு (இடையன் மேடு) என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் சிந்தை ஒடுங்கியவராய்ச் சிவயோக நிலையில் நின்று விடுவார்.
இவர் இவ்வாறு நின்று கொண்டிருக்கையில் ஒரு நாள் வான் வழியாகச் சென்று கொண்டிருந்த சித்தர் ஒருவர், இடைக்காடரைக் கண்டு கீழே இறங்கி வந்து "மகனே நீ எதைப் பற்றிய சிந்தனையிலிருக்கிறாய்'' என்றார். சுயநினைவுக்கு வந்த இடைக்காடர் அந்த சித்தரை வணங்கி பால் முதலியன கொடுத்து தாகம் தீர்த்தார். மனம் மகிழ்ந்த சித்தர் இடைக்காடருக்கு வைத்தியம், சோதிடம், ஞானம், யோகம் ஆகியவற்றை உபதேசித்து சென்றார்.
அன்று முதல் இடைக்காடர் சித்தரானார். தனது சோதிடத் திறமையால் இன்னம் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போகும் நிலையை அறிந்தார். முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக்கூடிய எருக்கிலை போன்றவற்றைத் தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். கெடாமல் இருக்கக் கூடிய குருவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார்.
இடைக்காடர் எதிர்பார்த்தபடியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல்பூண்டுகளும் அழந்தன. எருக்கிலை போன்ற அழியாதிருந்த தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவை போக்க ஆடுகள் சுவரில் தேய்க்கும் அப்பொழுது உதிரும் குருவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர் வாழ்ந்தார்.
பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவருடைய ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தார்கள். இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறி ஆட்டுப்பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார்.
பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கிவிட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர் மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார். உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது ஆறுகளும் ஏரிகளும் நிரம்பி வழிந்தன.
பூமி குளிர்ந்தது. மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப்பார்த்தார்கள்.நாட்டின் பஞ்சத்தை நீëக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைக் கொடுத்து ஆசீர்வதித்துச் சென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார்.
மேலும் இவர் தத்துவப்பாடலையும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக்கிராகி, துவி கந்தக்கிராகி போன்றவர்களை "ஊசி முறி'' என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார். (இவருடைய காலம் சங்க காலம் இடைக்காடரின் ஞான சூத்திரம்-70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்) ஜனன சாகரத்தில் சமாதியடைந்தாரென்று போகர் கூறுகிறார்.
இடைக்காடர் நவக்கிரகங்களில் புதன் பகவானை பிரதிபலிப்பவர் இவரை முறைப்படி வழிப்பட்டால். ஜாதகத்தில் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் கிட்டும். கல்வியில் தடை, சரியாக படிக்க முடியாத நிலை இவை எல்லாம் அகலும். வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சினைகள் நீங்கி வளம் பெருகும். கற்பனைத்திறன், கவித்திறன் கை கூடும்.
அரசாங்கத்தால் ஏற்படக்கூடிய வருமான வரி, சொத்து வரி, தொழில்வரி ஆகிய வற்றில் உள்ள பிரச்சினைகள் தீரும். புத்திசாலிëத்தனம் அதிகரிக்கும். பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளைவரம் கிட்டும். கல்விக்கூடங்களுக்கு உண்டான பிரச்சனைகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் விலகும். தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும். இவருக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வணங்கலாம். இவருக்கு பூஜை செய்ய சிறந்த கிழமை-புதன்கிழமை.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» இடைக்காட்டுச் சித்தர்
» இடைக்காட்டுச் சித்தர்
» இடைக்காட்டுச் சித்தர்
» இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்
» இடைக்காட்டுச் சித்தர் பாடல்
» இடைக்காட்டுச் சித்தர்
» இடைக்காட்டுச் சித்தர்
» இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்
» இடைக்காட்டுச் சித்தர் பாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum