காலாங்கிநாதர் சித்தர்
Page 1 of 1
காலாங்கிநாதர் சித்தர்
திரு மூலர் சித்தரின் சீடர்களில் முதன்மையானவர் காலாங்கி நாதர். இவர் சீன நாட்டை சேர்ந்தவர். காலாங்கி நாதர் சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். அவர் ககன குளிகையின் உதவியால் விண்வெளியாகச் சீன நாடு சென்றார். காலனுடைய அருள் பெற்று தான் சமாதியிலிருக்கும் காலத்தில் எமன் தன்னை அணுகாதிருக்கும் படி சமாதியில் அமர்ந்தார்.
அவர் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய பிரளயம் ஒன்று நிகழ்ந்தது. ஒரு முறை பெரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி மக்கள் மடிந்து கொண்டிருந்தனர். இதை ஏற்கனவே உணர்ந்திருந்த காலாங்கி நாதர் சதுரகிரி மலை மேல் ஏறிக் கொண்டிருந்தார். மலை உச்சியில் சித்தர்கள் பலர் தங்கியிருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் காலாங்கிநாதருக்கு மனம் மகிழ்ச்சியால் துள்ளியது.
தனக்குத் தெரிந்த காயகல்ப முறைகள் பலவற்றை அவர்களுக்குத் தெரிவித்தார். அவர்களிடமிருந்து ரசவாத வித்தைகள் சிலவற்றைக் கற்றுக் கொண்டார். மிகவும் உயர்ந்த சதுரகிரி மலை மீது அழகான குளம் ஒன்று இருந்தது. அதன் கரையில் புலி ஒன்று படுத்திருந்தது. அதை காலாங்கி நாதர் உற்றுப்பார்த்தார்.
அவருக்கு உண்மை விளங்கி விட்டது. உண்மையான புலி என்றால் பாய வேண்டுமல்லவா! பாயவில்லை. "யாரோ ஒரு சித்தபுருஷர் சாதாரண மக்களிடம் இருந்து தனக்குத் தொந்தரவு வரக் கூடாது என்பதற்காக இவ்வாறு புலி வடிவத்தில் இருக்கிறார்'' என்பதை உணர்ந்து காலாங்கிநாதர் அவரை வணங்கினார்.
புலி வடிவம் கொண்ட அந்த சித்தர் காலாங்கிநாதருக்கு உபதேசித்து விட்டு உடனே அங்கிருந்து மறைந்து விட்டார். இது திரேதாயுகத்தில் நடந்த நிகழ்ச்சி. அதன் பிறகு பலகாலம் காலாங்கிநாதர் அந்த மலை மேலே தவம் செய்ய ஆரம்பித்தார். சதுரகிரி மலையில் மேலும் பல சித்தர்களை காலாங்கி நாதர் சந்தித்ததை தமது ஞானவிந்த ரகசியம் 30 என்ற நூலில் காலாங்கி நாதர் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் காஞ்சீபுரத்தில் முக்தியடைந்துள்ளார் என்று காலாங்கி நாதர் போகர் ஜனன சாகரம் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சித்தர் தத்துவச் சிந்தனைகள் பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்
» பூண்டி சித்தர்
» ராம தேவர் சித்தர்
» சித்தர் பூமி
» இராமதேவ சித்தர்
» பூண்டி சித்தர்
» ராம தேவர் சித்தர்
» சித்தர் பூமி
» இராமதேவ சித்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum