‘ஏரோபிக்’ திறன்
Page 1 of 1
‘ஏரோபிக்’ திறன்
முப்பது வயதிற்கு மேல் உடம்பில் உற்சாகமும், ஊக்கமும் குறைந்து போகின்றது. ஏன் இப்படி சோர்ந்து இருக்கிறார்கள் என்று யாராவது கேட்டால் வயதாகிக் கொண்டு இருக்கிறதே என்று லேசாக சொல்லிவிடுவார்கள். உடலில் உற்சாகம் குறைந்து போவதற்கு வயது மட்டும் ஒரு காரணமல்ல. சரியான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும் தான்.
‘நம்மிடம் இருக்கும் எல்லாவற்றிலும் மிக உயர்ந்தது உடல் நலமே, உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்கும் அளவைப் பொறுத்து தான் உடல் ஆரோக்கியமும் மனவளமும் அதிகரிக்கிறது என்பார் காந்தியடிகள். ஏதாவது வேளை செய்து கொண்டிருந்தால் போதும் உடல் உறுதியாகும். 'ஏரோபிக்திறன்’ குறையாமல் இருக்கும்.
வயதாவது தெரியாது. ‘ஏரோபிக்’ என்பது வேறு ஒன்றும் இல்லை கை கால்களில் அசைவு பயிற்சிதான். ஏரோபிக் திறன் என்பது நுரையீரலுக்குள்ளே நுழைகிற காற்றில் உள்ள ஒட்சிசன் எவ்வளவு சதவீதம் நம் இரத்தத்தில் உள்ளிழுகப்படுகிறதோ அந்த அளவு அதிகமாகும். சாதாரணமாக 25 வயது வரை ஏரோபிக் திறன் அதிகமாக இருக்கும்.
அதன் பிறகு உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் இதன் அளவு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தால் மூச்சு முட்டும், மூட்டுகள் வலிக்கும். உடலின் எடையும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.
ஏரோபிக்கின் நோக்கமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடம்பு சேகரிக்கும் ஒட்சிசன் அளவை அதிகரிப்பதுதான். இதயத்தில் வேகத்தைக் காட்டி அதிக இரத்தத்தை வெளியேற்றி உடம்பு முழுவதும் பரவலாக்கும் ஏரோபிக் திறன் மூலம் உடலின் சக்தியும் ஆற்றலும் கூடும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஏரோபிக் உடற்பயிற்சி
» ஏரோபிக் வகை உடற்பயிற்சிகள்
» இலக்கியத் திறன்
» புனைகதைத் திறன்
» இலக்கியத் திறன்
» ஏரோபிக் வகை உடற்பயிற்சிகள்
» இலக்கியத் திறன்
» புனைகதைத் திறன்
» இலக்கியத் திறன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum