தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சி செய்வதன் பயன்கள்

Go down

உடற்பயிற்சி செய்வதன் பயன்கள் Empty உடற்பயிற்சி செய்வதன் பயன்கள்

Post  meenu Thu Jan 31, 2013 6:27 pm

காலை மாலைகளில் நடப்பவர்களும், நீண்ட நேரம் பயிற்சி செய்பவர்களும் வியர்வை வெளியேறவில்லை என்றால் உடல் எடை குறையவில்லை என்று வருத்தப்படுவார்கள். இது தவறான கருத்தாகும். ஒரு சிலருக்கு வியர்வை வராது. அதனால் உடல் எடை குறையவில்லை என்று அர்த்தமில்லை.

வியர்க்கவில்லை என்றாலும் உடற்பயிற்சி செய்ததின் அல்லது நடந்ததன் மூலம் தேவையான கலோரி வெளியேறி அவர்கள் உடல் உறுதியை நன்கு வலுவுடனே வைத்திருக்கும். வெறும் வயிற்றுடன் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது.

ஆனால் இன்றைய நவீன உடற்பயிற்சியால் உணவுக்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்யலாம் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. வெறும் வயிற்றில் காலையில் செய்யும் உடற்பயிற்சியால் 15 சதவிகிதம் கலோரி வெளியேறுகிறது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது..

நீச்சல் அடிப்பது மிகச்சிறந்தது. உடற்பயிற்சிகளில் உடல் முழுமைக்கும் கிடைக்கும் ஒரே நல்ல உடற்பயிற்சி நீச்சல் பயிற்சி தான். காலையில் நீச்சல் அல்லது கைகளுக்கும் கால்களுக்கும் பலத்தைக்கொடுக்கக்கூடிய உடற்பயிற்சிகளை வைத்துக் கொள்வதே மிகவும் நல்லது.

சாதாரணமாக மெதுவாக நடப்பதைவிட உடற்பயிற்சி மெதுவாக செய்வதைவிட சுறுசுறுப்புடன் செய்தால் மூன்று மடங்கு அதிகமான கலோரி செலவிடப்பட்டு உடல் உறுதியாகும். எடைகுறையும் அழகும் கூடும்.

இதற்கும் நீச்சலே மிகவும் சிறந்தது. 15 நிமிடங்கள் வேகமாக ஓடினால் அது 45 நிமிடங்கள் சாதாரணமாக நடப்பதற்குச் சமமானது.ஆனால் காலையில் வேகமாக ஓடி இதயத்தை துன்புறுத்துவது சரியில்லை. இதற்கு மாலைநேரமே உகந்தது என்பது கார்னெல் பல்கலைக்கழகத்தின் கருத்து.

உட்கார்ந்தே பார்க்கும் வேலை என்றாலும் சரி உடல் உழைப்பு பணி என்றாலும் சரி அதை ஆர்வத்துடன் பார்த்தால் அதுவே உண்மையான உடற்பயிற்சி என்கிறது இந்த கார்னெல் பல்கலைக்கழகம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum