உடற்பயிற்சி
Page 1 of 1
உடற்பயிற்சி
உடல்நலத்தை உயர்த்த வேண்டிச் செய்யப்படுகின்ற பயிற்சிகளை இளம் வயதிலேயே தொடங்குவது மிகவும் சிறந்தது. உடற்பயிற்சியின் அவசியத்தைச் சிறு குழந்தைகளுக்கு நாம் உணர்த்த முயல வேண்டும். உடல் நலம் உயர்த்துகின்ற வகையில் நாம் செய்கின்ற உடற்பயிற்சிகள் நமது உடலின் சக்தியையும், திறத்தையும் மேம்படுத்தி, நீடித்துழைக்கும் ஆற்றலைத் தந்து, வேலைப்பளுவையும் உடல் நோயையும் தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையையும் தருவதாக அமைய வேண்டும்.
உடற்பயிற்சியின் தேவையும் அளவும் மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. ஒவ்வொருவரும் தங்களது வயதுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளாமல் சைக்கிள் விடுதல், நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள் போன்றவற்றில் ஈடுபடலாம்.
அதே நேரத்தில் வயதின் காரணமாக உடற்பயிற்சியை ஒதுக்குவதும் அறிவுடைமை ஆகாது. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் இதயக்கோளாறு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை உடற்பயிற்சியின் மூலம் வராமல் இருக்கவும், வந்தால் அவற்றைக் கட்டுப்படுத்தவும் இயலும்.
இது தவிர உடற்பயிற்சிக்கும் மனநலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதென்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் உடல் நலத்துடன் மனநலமும் அமையப் பெறுகின்றனர். இவர்களது பழகு முறையும், நட்புத் திறமும், நினைவாற்றலும், சிறப்பாக இருக்கக் காண்கிறோம். எனவே இன்றே, இப்போதே உங்களுக்கென்று ஒரு பயிற்சித் திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்படத் தொடங்குங்கள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சி - 20
» உடற்பயிற்சி
» சுறுசுறுப்புக்கு உடற்பயிற்சி
» உடற்பயிற்சி - 20
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி
» உடற்பயிற்சி
» சுறுசுறுப்புக்கு உடற்பயிற்சி
» உடற்பயிற்சி - 20
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum