நடைபயிற்சியின் நன்மைகள்.....
Page 1 of 1
நடைபயிற்சியின் நன்மைகள்.....
* நடைபயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் சிறந்ததும் தேவையான ஒரு பயிற்சியுமாக இருக்கிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்ற பயிற்சியாகும். நடைபயிற்சியை தினமும் பழக்கமாக்கிக் கொள்வதால் உடல் இரத்த ஓட்டமானது சீராகிறது, நுரையீரல் சுவாசம் சீராகிறது, உணவு செரிமானம் சீராகிறது மேலும் இது உடலை வலுப்படுத்துவதோடல்லாமல் மூளையை நன்றாக புத்துணர்ச்சியாக்குகிறது. பிறறிடத்தில் மென்மையாக பழகும் குணத்தை வளர்க்கிறது.
* நடை பயிற்சி என்பது பொதுவாக தினமும் விரைவான எட்டுக்களை வைத்து 6 கிலோமீட்டர் வரை செல்வதாகும். நான்கு மணிநேரம் நீந்துவதும், நான்கு மணிநேரம் டென்னிஸ் விளையாடுவதும் இதற்குச் சமமானதே. அல்லது 20 கிலோ மீட்டர் சைக்கிள் மிதிப்பதும் இதற்குச் சமமானதே.
* நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. நடைபயிற்சியின்போது உடலிலுள்ள எல்லாத் தசைத் தொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். இரத்த சுழற்சியும் உடலின் எல்லாபாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.
* நாள்தோறும் நடைபயிற்சியை செய்வதால் உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராக்குகிறது.
* நடை பயிற்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழிவகுக்கிறது. குறிப்பாக முதுமையடைந்தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ளும் திறமையை வளர்த்துவிடுகிறது
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நடைபயிற்சியின் இரு வகைகள்
» நடைபயிற்சியின் இரு வகைகள்
» நடைபயிற்சியின் அவசியம்
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
» நடைபயிற்சியின் இரு வகைகள்
» நடைபயிற்சியின் அவசியம்
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum