மூளைக்கு பலம் சேர்க்கும் `ஜாகிங்'
Page 1 of 1
மூளைக்கு பலம் சேர்க்கும் `ஜாகிங்'
ஓட்டப் பயிற்சி உடலுக்கு நல்லது என்பது நமக்குத் தெரியும். ஓடும்போது உடலின் அனைத்து பாகங்களும் இயங்குவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். `ஜாகிங்' (மெல்லோட்டம்) செய்வதும் சிறந்த பயிற்சிதான். இதனால் மூளை பலம்பெறுகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தினமும் ஜாகிங் செல்வதால் அதிகளவில் புதிதாக மூளை செல்கள் உற்பத்தி ஆகிறது என்கிறார்கள். சுவாசப் பயிற்சியால் மூளையின் கார்டெக்ஸ் பகுதி தூண்டப்படுகிறது. ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. ஹார்மோன்களும் சுறுசுறுப்பாகின்றன. ஜாகிங் செய்யும்போதும் இதே மாற்றங்கள் நிகழ்கின்றன.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். எலிகளை நகரும் சக்கரத்தில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுத்தினார்கள். தொடர்ந்து சில நாட்கள் பயிற்சி பெற்றதும் அந்த எலிகளில் சில மாற்றங்களை கண்டறிந்தனர்.பயிற்சியில் ஈடுபட்ட எலி, பயிற்சி செய்யாத எலி இரண்டிற்குமான மூளைப் பதிவுகள் கணினி மூலம் பரிசோதிக்கப்பட்டது.
இதில் பயிற்சி செய்த எலிகளுக்கு புதிதாக மூளை செல்கள் உருவாகி இருந்தன. எலிகள் சுமாராக ஒரு நாளைக்கு 15 மைல் அளவுக்கு ஓடி இரை தேடுகின்றன. இதனால் ஒரு சில நாட்களில் ஆயிரக்கணக்கில் புதிய மூளை செல்கள் உருவாகின்றன.
ஆய்வுக்கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட எலிகளுக்கு சுமார் 6 ஆயிரம் மூளை செல்கள் புதிதாக உற்பத்தி ஆகி இருந்தன.ஜாகிங் செய்வது, சுவாசத்தை துரிதப்படுத்துவதன் மூலம் கார்டிசோல் என்னும் ஹார்மோன் செயல்பட்டு அதிகப்படியான மூளை செல்கள் உற்பத்தியாக துணைபுரிகிறது.
நாம் அனேக விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்ளவும், பல்வேறு சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு காணும் வகையில் மூளை சுறுசுறுப்பாக செயல்படவும் இந்த மூளை செல்கள் உதவும். நீங்களும் தவறாமல் ஜாகிங் போறீங்கதானே!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பால் அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்; ஆய்வில் தகவல்.
» ஜாகிங் போகலாம்...
» ஆயுளை கெட்டியாக்கும் `ஜாகிங்'
» ஜாகிங் போகலாம் வாங்க
» மூளைக்கு ஒரு சவால்
» ஜாகிங் போகலாம்...
» ஆயுளை கெட்டியாக்கும் `ஜாகிங்'
» ஜாகிங் போகலாம் வாங்க
» மூளைக்கு ஒரு சவால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum