பால் அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்; ஆய்வில் தகவல்.
Page 1 of 1

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு (ஏ.எம்.டி.) பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது.
பிரிட்டனில் வருடத்திற்கு ஏறத்தாழ 2 லட்சம் பேர் இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 1,313 பெண்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் D வைட்டமின் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்வோர் மற்றும் உடலில் டி வைட்டமின் அளவு அதிகமாக உள்ளோர் ஆகியோரிடம் இக்குறைபாடு அதிகமாக காணப்படவில்லை என்பது தெரிய வந்தது.
குறிப்பாக பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் தானியம் ஆகியவற்றை அதிகம் எடுத்து கொள்வது நன்மை பயக்கிறது. சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவதும் நன்மையையே தருகிறது. ஏனெனில் வைட்டமின் டி உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது. எனவே, பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை பயன்படுத்துவது இக்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என அந்த ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும், மீனில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பயன் தரும் என்பதும் முன்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்ப்பிணிகள் காபி குடிப்பது கருவுக்கு ஆபத்து–ஆய்வில் தகவல்
» கண்ணாடி பயன்படுத்தாமல் தூரப் பார்வைக்கு தீர்வு! ஆய்வில் தகவல்.
» பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்: ஆய்வில் தகவல்
» மூளைக்கு பலம் சேர்க்கும் `ஜாகிங்'
» பல் ஈறுநோய் இருந்தால் குறைப்பிரசவமாகுமாம் ! ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum