ஆயுளை கெட்டியாக்கும் `ஜாகிங்'
Page 1 of 1
ஆயுளை கெட்டியாக்கும் `ஜாகிங்'
`ஜாகிங்' எனப்படும் துள்ளோட்டப் பயிற்சி ஆயுளை கெட்டியாக்குகிறது என்று புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. பார்க்குகளிலும், `பீச்'சிலும், சாலையோரங்களிலும் குண்டு உடல்காரர்களும், நோய் தீர நினைப்பவரும், இளம் பிராயத்தினரும் மூச்சுவாங்க நடைபயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சி செய்வதை பார்க்கலாம். இன்னும் சிலர் இயங்கும் எந்திரங்களுடன் மல்லுக்கட்டி பயிற்சி செய்கிறார்கள்.
இப்படி மூச்சு இளைக்கும் பயிற்சிகளை மேற்கொள்வதைவிட லேசாக குதித்து குதித்து குறைந்த வேகத்தில் துள்ளோட்டம் (ஜாகிங்) செய்தாலே ஏராளமான பலன் கிடைப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. டென்மார்க் நாட்டிலுள்ள கோபன்கேகன் நகர இதயவியல் மையம் ஒன்று இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வின்படி, மிக குறைந்த வேகத்தில் வாரத்திற்கு ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஜாகிங் பயிற்சி செய்து வந்தால் பயிற்சி செய்பவரின் ஆயுள் 6 ஆண்டுகள் அதிகரிக்கிறதாம்.
20 வயது முதல் 70 வயது வரை பயிற்சி மேற்கொண்டால் முழுதாக 108 நாள் பயிற்சி செய்ததற்கு சமமாகும். இவ்வளவு காலம் பயிற்சி செய்யும் ஆண்களின் ஆயுள் 6.2 ஆண்டுகளும், பெண்களின் ஆயுள் 5.6 ஆண்டுகளும் கூடுகிறதாம். மேலும் மரணம் 44 சதவீதம் தள்ளிப்போவதாகவும் ஆரோக்கிய அடிப்படையில் கணக்கிட்டு கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். இதற்கு முந்தைய சில ஆய்வுகள் ஜாகிங் மற்றும் ரன்னிங் போன்ற பயிற்சிகளால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறியது.
அதனை இந்த ஆய்வு முடிவு மறுக்கிறது. இருபதாயிரம் ஆண் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் 20 முதல் 93 வயதுடையவர்கள் ஆவர். அப்போது ஜாகிங் பல்வேறு ஆரோக்கிய பலன்களை தருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஜாகிங் பயிற்சியால் ஆக்சிஜன் உள்ளிழுக்கும் அளவு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. கொழுப்பு படிவதிலிருந்து உடலை காக்கிறது.
இதய தசைகள் செயல்படுவதை ஊக்குவிக்கிறது. உளவியல் இயக்கமும் சீர்படுகிறது. வேறு சில பலன்களும் உடலுக்கு கிடைக்கிறது. சமூக பிரச்சினைகளால் மனவியல் குழப்பங்களுக்கு தள்ளப்படுபவர்கள் நிச்சயம் ஜாகிங் செய்து நல்ல பலனைப் பெற முடியும்' என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் ஸ்கானர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஜாகிங் போகலாம்...
» ஜாகிங் போகலாம் வாங்க
» மூளைக்கு பலம் சேர்க்கும் `ஜாகிங்'
» ரத்தப்பரிசோதனை கூறிவிடும் நமது ஆயுளை!
» சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும்
» ஜாகிங் போகலாம் வாங்க
» மூளைக்கு பலம் சேர்க்கும் `ஜாகிங்'
» ரத்தப்பரிசோதனை கூறிவிடும் நமது ஆயுளை!
» சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum