தொந்தி குறைய பயிற்சி செய்யும் முன் கருத்தில் கொள்ள வேண்டியவை
Page 1 of 1
தொந்தி குறைய பயிற்சி செய்யும் முன் கருத்தில் கொள்ள வேண்டியவை
தொந்தி பெரிதாக உள்ளவர்கள் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம்.அதே சமயத்தில் தொந்தியை முழுமையாக குறைக்க உதவக்கூடியது. இப்பயிற்சி சரியாக வயிற்றை குறி வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை:-
1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.
2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.
3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்
4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக,நிதானமாக நடைபெற வேண்டும்.
புதிதாகப் பயிற்சி செய்வோருக்கு:-
1.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.
2.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.
3.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.
4.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.
5.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும், எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தொந்தி குறைய எளிய பயிற்சி
» யோகாசனம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை.....
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» யோகாசனம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை.....
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum