தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிக உடற்பயிற்சி ஆபத்து

Go down

அதிக உடற்பயிற்சி ஆபத்து Empty அதிக உடற்பயிற்சி ஆபத்து

Post  amma Thu Jan 31, 2013 5:57 pm




ஆரோக்கிய வாழ்க்கை முறை, தவறாத உடற்பயிற்சி என்றுள்ள ஒருவருக்கு `இதயநோய் பிரச்சினை ஏற்படுமா?' என்று கேட்டால் நீங்கள் `இல்லை' என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதையும் தாண்டி இதயப் பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மையும் கூட இதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடம்பைக் கச்சிதமாக வைத்திருக்க ஆசைப்படுவது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமான பலனைத் தரும். அதைப் போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிகப் பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது தான்.

போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உடலின் உள்ளே செயல்பாட்டு வேகம் குறைகிறது. எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் குண்டாகி விடுவார்கள் முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை உங்கள் உடல்நிலையைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum