அதிக உடற்பயிற்சி ஆபத்து
Page 1 of 1
அதிக உடற்பயிற்சி ஆபத்து
உடல் பருமனை குறைக்க மருத்துவர்கள் பல வழிகளை பரிந்துரைப்பர். இதில் உடற்பயிற்சி தவிர்க்க இயலாத ஒன்று. மிகக் குறைந்த பட்சமாக நடை பயிற்சி நிச்சயம் இருக்கும். இந்நிலையில் உடல் பருமன் மற்றும் அதனை குறைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகள் செய்தால் அடிக்கடி ஜலதோஷம், சளி பிரச்னை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
உடல்பருமனை கட்டுப்படுத்த மட்டுமின்றி ஆரோக்கியத்தை பேணவும் உடற்பயிற்சி அவசியம். ஆனால் அது அளவோடு இருப்பது அத்தியாவசியம். இங்கிலாந்தில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தினசரி நடை பயிற்சி மேற்கொள்வது உடல் பருமன் குறைப்பு, ஆரோக்கியம், நோய்த்தாக்குதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
அனைத்து வயதினரும் தினசரி 30நிமிட நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இவை சாத்தியமாகிறது. குறிப்பாக ஜலதோஷம் மற்றும் சளி பிரச்னையில் இருந்து 30சதவீதம் அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. மாறாக ஓட்டம் போன்ற அதிவேக செயல்பாடுகளுக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது.
இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளின் ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகிறது. ஒரு உறுப்பு ஒத்துழைக்க மறுத்தாலும் அது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எதுவாக இருந்தாலும் அளவோடு செய்ய வேண்டும். மருத்துவ அறிவுரையுடன் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அதிக உடற்பயிற்சி ஆபத்து
» அதிக உடற்பயிற்சி ஆபத்து
» அதிக நேரம் அமர்வது உயிருக்கு ஆபத்து
» அதிக உப்பால் உடல் நலத்திற்கு ஆபத்து
» டைப் 1 நீரிழிவா? அதிக ஆபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்
» அதிக உடற்பயிற்சி ஆபத்து
» அதிக நேரம் அமர்வது உயிருக்கு ஆபத்து
» அதிக உப்பால் உடல் நலத்திற்கு ஆபத்து
» டைப் 1 நீரிழிவா? அதிக ஆபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum