தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சியில் சிறந்த நடைப்பயிற்சி

Go down

உடற்பயிற்சியில் சிறந்த நடைப்பயிற்சி Empty உடற்பயிற்சியில் சிறந்த நடைப்பயிற்சி

Post  meenu Thu Jan 31, 2013 5:56 pm

உடற்பயிற்சிகள் பலவிதமாகச் செய்யப்படுகின்றது. ஆனால் ஓடுகின்ற பயிற்சி செய்கின்ற போது தான் உடல் பருமன் குறைக்கப்படுகின்றது. கலோரிகள் இழக்கப்படுகின்றன. வியர்வை வெளியேற்றப்படுகின்றது. பலவிதமான தோல்நோய்கள் குறைவதற்குரிய சாத்தியக்கூறுகள் வியர்வை வெளியேறும் போது காணப்படுகின்றன.

காலநிலை சிறப்பாக உள்ள நாடுகளில், வாகனங்கள் ஓடாத மரங்கள் நிறைந்த பகுதிகளில் ஓடுவது சிறந்தது. மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் போது சுத்தக்காற்றைச் சுவாசிக்கக் கூடியதாக இருக்கும். குளிர்பிரதேசங்களில் வாழ்பவர்கள் அல்லது மழைகாலங்களில் ஓடுவதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் (Laufband) பயன்படுத்தலாம்.

உடற்யிற்சி உபகரணங்களைப் பயன்படுத்துகின்ற போது குறிப்பிட்ட பகுதிகளில் தசைகள் தொய்வடையாமல் இறுக்கமடைகின்றன. வயதான தொழுதொழு என்ற தசைகள் காணப்படாமல் இறுக்கமான பகுதிகளாகத் தசைப்பகுதிகள் காணப்படும். உடல் உறுப்புக்களில் ஏற்படும் நோய்களுக்கு அதற்குரிய உடற்பயிற்சி கருவிகளைப் பயன்படுத்திச் செய்யலாம்.

உதாரணமாக இருதயநோயாளிக்கு நேரம் ஒதுக்குவது கடினம் என்றால், உடற்பயிற்சி நிறுவனங்களுக்குச் (Fitness Studio) செல்லலாம். அங்கு சென்றால், மற்றவர்களைப் பார்க்கும்போது ஒரு உத்வேகம் தோன்றும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum