உடலுக்கு மட்டுமல்ல மூளை வளர்ச்சிக்கும் உதவும் உடற்பயிற்சி!
Page 1 of 1
உடலுக்கு மட்டுமல்ல மூளை வளர்ச்சிக்கும் உதவும் உடற்பயிற்சி!
நீங்கள் சாதனை படைக்க வேண்டுமா?
குட்டி போட்ட பூனை போல அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி தொடர்ந்து சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமா?
ஒரே பதில் உடற்பயிற்சி செய்யுங்கள்!
உடற்பயிற்சி செய்வதால் உடல்நலம் சீராகிறது என்பதுடன் மூளையும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது என்பதுதான் புதிய கண்டுபிடிப்பு.தினமும் உடற்பயிற்சி செய்தால் மூளையின் தசைநார்கள் சுண்டிவிடப்பட்டு நன்கு இயங்குகின்றன.
இதனால் சுறுசுறுப்புடன் சிந்தித்து அதே ஆர்வத்துடன் வேலையும் செய்ய முடிகிறது. அதிகபட்சம் தினம் முப்பது நிமிடங்கள் செய்ததுமே மூளைக்கு வெள்ளம்போல் ஆக்ஸிஜனும் குளுகோஸும் பாய்ந்து விடுகின்றன.
இதனால் நமது மூளை ஆற்றல் குறையாமல் உச்சநிலையில் செயல்படுகிறது. மனிதனின் மூளையில் உள்ள செல்கள் முப்பது வயது ஆரம்பமானதும் கொஞ்சங் கொஞ்சமாகச் சிதைய ஆரம்பிக்கிறது. இதனால் அடுத்த பத்தாண்டுகளில் மனிதனது வேலைகளில் மந்தம் ஞாபகமறதி தரக்குறைவு முதலியன ஏற்பட்டு வருகின்றன.
பிரச்னைகளைத் தீர்க்க சிந்திக்கவோ திறமையாகச் செயல்படமோ இயலாமல் போய்விடுகின்றன. ஆனால் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்து வந்தால் மூளையில் அடைபட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள இந்த செயல்கள் விடுவிக்கப்பட்டு விடுகின்றன.
இதனால் எப்போதும் போலச் சிந்தித்து சுறுசுறுப்பாக வாழ மூளை நன்கு செயல்பட உதவுகிறோம். எளிய உடற்பயிற்சியே இந்த மூளை ஆற்றலுக்கு ஊட்டம் தரும் சத்துணவு.
மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் பிராட் ஹாட்ஃபீல்டு என்பவர் உடற்பயிற்சியின் மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மனமும் மூளையும் மிக விழிப்புணர்வுடன் இருக்கும்.
இதனால் ஒவ்வொரு நாளும் பிரச்னைகள் நிரம்பிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூட விடாமுயற்சியுடன் வேலை பார்ப்பார்கள் என்பதை கண்டுபிடித்துள்ளார்.
உடற்பயிற்சி செய்வதால் டென்ஷனான பிரச்னையின் போதும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடிகிறது என்று உடற்பயிற்சியைப் பல ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளவர்கள் இவரிடம் கூறினார்கள்.
40-50 வயதுக் கார் டிரைவர்கள் சற்றுத்தள்ளியே வேகமாகச் சென்று தங்கள் கார்களை நிறுத்துவார்கள். இதற்குக் காரணம் உடற்பயிற்சியால் ஏற்பட்ட விழிப்புணர்வுதான். மூளையின் செல்கள் தடைப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட டிரைவர் ஸ்டாப்பின் முன்பே 20 அடி பின்னால் தள்ளித்தான் நிறுத்துவார். வீட்டு டிரைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடைசி நேரத்தில் ஓட்டி சரியாக வாசலில் நிறுத்துவார்கள்.
உடற்பயிற்சி செய்பவர் என்றால் வழக்கம் போல் ‘சர்’ரென்று வந்து வாசல் எதிரில் சரியாக நிறுத்துவார். இதுவும் இவர் கண்டுபிடித்தவையே. உடற்பயிற்சி செய்வதால் மூளை சுறுசுறுப்பாக-திறமையாகச் செயல்படும் என்பதை எலிகளை வைத்தும் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரே இடத்தில் வைக்கப்பட்ட எலிகளையும் அங்குமிங்கும் ஓடியபடியே இருக்கும்படியாகச் சில எலிகளைப் பழக்கியும் இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்கள். ஓடி விளையாட பயிற்சி கொடுக்கப்பட்ட எலிகளின் மூளையில் மூளை செயல்படத் தூண்டும் டாப்மைன் என்ற இரசாயனப் பொருள் நன்கு சுரந்திருந்தது.ஞாபக சக்தியைத்தரும் பொருள் பலவிதமான சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி சீராக்கி ஒரு முகச்சிந்தனையைத் தூண்டும்
வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்ற பேராவலுடன் உள்ளவர்கள் நடைப்பயிற்சி உடற்பயிற்சி நீச்சல் என்று இதில் எந்த ஒன்றைப் பின்பற்றினாலும் தினம் அரைமணி நேரம் டென்னிஸ் பயிற்சியும் பெறுங்கள்.
உங்களுக்குத் தேவையான விழிப்புணர்வு செயல் வேகம் என அனைத்தையும் டென்னிஸ் பயிற்சியின் மூலம் பெற்றுவிடலாம் என்று டாக்டர் பி. ஹாட்ஃபீல்டு கூறுகிறார். அந்த அளவிற்கு டென்னிஸ் பயிற்சி மூளைக்கு வல்லமை அளிக்கிறதாம். ஆக வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் மூளையைத் துருப்பிடிக்க முடியாமல் செய்ய உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்போம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூளை வளர்ச்சிக்கும் உதவும் உடற்பயிற்சி
» உடலுக்கு உறுதி தரும் உடற்பயிற்சி
» மருத்துவத்துக்கு மட்டுமல்ல அழகிற்கும் உதவும் துளசி
» மூளை வளர்ச்சிக்கு உதவும் தாய்ப்பால்
» மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு
» உடலுக்கு உறுதி தரும் உடற்பயிற்சி
» மருத்துவத்துக்கு மட்டுமல்ல அழகிற்கும் உதவும் துளசி
» மூளை வளர்ச்சிக்கு உதவும் தாய்ப்பால்
» மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum