உடலுக்கு சக்தி தரும் உடற்பயிற்சிகள்
Page 1 of 1
உடலுக்கு சக்தி தரும் உடற்பயிற்சிகள்
ஜாகிங் போகலாம்: அதிகாலைப் பொழுதில் தம்பதி சமேதராக ஜாகிங் போவது அற்புதமான விசயம். அந்த நேரத்தில் பேசுவதற்கு நிறைய விசயங்கள் கிடைக்கும். எனவே ஜாலியாக பேசியபடியே ஜாகிங் போகலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைவதோடு, கச்சிதமான உடல் அமைப்பும் பெறலாம்.
சைக்கிள் பயிற்சி: சைக்கிள் ஓட்டுவது மிகச்சிறந்த உடற்பயிற்சி. இது தொள தொள தசைகளை இறுக்கும். அதிக கலோரிகளை எரிக்கும். சைக்கில் பயணம் உடம்பையும், மனதையும் உற்சாகமடையச்செய்யும்..
நீச்சல்: நீச்சல் மிகச்சிறந்த உடற்பயிற்சி. தினசரி நீச்சலடிப்பது உற்சாகத்தோடு, உடல் பருமனையும் குறைக்கும். மனதும் ரிலாக்ஸ் ஆகும்.
டென்னிஸ் விளையாடுங்கள்: உடம்பில் உள்ள வியர்வை வெளியேறும் வகையில் டென்னிஸ், பூப்பந்து, இறகுப்பந்து போன்ற ஜோடியாக விளையாடும் விளையாட்டுக்களை விளையாடலாம். இதனால் உற்சாகம் கிடைப்பதோடு உடலும் இளைக்கும். உடற்பயிற்சியோடு தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் இது உடம்பில் நீர்ச்சத்தினை தக்கவைக்கும். தோல் வறட்சியை தடுக்கும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடலுக்கு சக்தி தரும் உடற்பயிற்சிகள்
» இதயத்திற்கு நன்மை தரும் உடற்பயிற்சிகள்
» தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள்
» தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள்
» சக்தி தரும் மந்திரங்களும்,வெற்றி தரும் யந்திரங்களும்
» இதயத்திற்கு நன்மை தரும் உடற்பயிற்சிகள்
» தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள்
» தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள்
» சக்தி தரும் மந்திரங்களும்,வெற்றி தரும் யந்திரங்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum