தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள்

Go down

தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள் Empty தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள்

Post  amma Thu Jan 31, 2013 1:43 pm

தாங்கும் சக்தி பெற வேண்டுமானால் ஒருவர் ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அதாவது தொடர்ந்து ஒரு பயிற்சியை 20 நிமிடங்களுக்குக் குறையாமல் மூச்சு வாங்கும் அளவிற்கு (மூச்சு அடைக்கும் அளவிற்கு அல்ல) செய்ய வேண்டும். இதன் மூலம் இதயம் தொடர்ந்து வேகமாக வேலை செய்து இதய தசைகளை வலுவடையச் செய்கிறது.

உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு தசைகளுக்குத் தேவையான ஆற்றல் கொடுக்கப்படுகிறது. இதனால் இதய தசைகள் வலுப்பெற்று இருதய நோய் வருவது தவிர்க்கப்படுகிறது. திடீர் நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. நீங்கள் வாரத்திற்கு மூன்று நாள் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் வேகமாக நடந்தாலோ அல்லது ஓடினாலோ அல்லது நீச்சல் அடித்தாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ தாங்கும் சக்தி வந்துவிடுகிறது.

இதய நோய்க்கு பயப்படவேண்டியதில்லை. உங்களுக்குத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பதற்கு ஒரு சிறிய சோதனை. உங்கள் அலுவலகத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்று மாடிகளை படிகள் வழியாக ஒரே அடியாக வேகமாக ஏறிப்பாருங்கள். மூன்றாவது மாடியில் ஏறும்போது மூச்சு வாங்குகிறது என்றால் தாங்கும் சக்தி இல்லை என்று பொருள்.

மூன்றாவது மாடியில் ஏறியதும் உங்களால் செல்போனில் யாரிடமாவது பேச முடியும் என்றால் உங்களுக்கு நல்ல தாங்கும் சக்தி இருக்கிறது என்று பொருள். பொருளாதார வசதி உள்ளவர்கள் ’Tread Mill’ வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். வீட்டருகில் உள்ள சாலையில் ஓட வசதி இல்லையென்றால் அருகிலுள்ள ஓர் உடற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்துவிடலாம்.

அங்கு முறைப் படி உடற்பயிற்சியைக் கற்றுத்தர பயிற்சியாளர்களும் இருப்பார்கள். பலர் மத்தியில் உடற்பயிற்சி மேற்கொண்டால் அலுப்புத்தட்டாது. சில நல்ல நண்பர்களைச் சம்பாதிக்கும் வாய்ப்பும் கூட இந்த உடற்பயிற்சி மையத்தில் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் நமக்கு வசதிப்படும் நேரத்தில் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லலாம். மழை பெய்யும் போது கூட உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum