அதிக உடற்பயிற்சி ஆபத்து
Page 1 of 1
அதிக உடற்பயிற்சி ஆபத்து
ஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி என்றுள்ள ஒருவருக்கு `இதயநோய் பிரச்சினை ஏற்படுமா?' என்று கேட்டால் நீங்கள் `இல்லை' என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதையும் தாண்டி இதயப் பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மையும் கூட இதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் `ஜெட்' வேக வாழ்க்கைமுறைக்குப் பலியாவது தூக்கம்தான். `நான் சில மணி நேரம் தூங்கினால் போதும், தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்' என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள்.
சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
``நம்மை நாமே தண்டித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது'' . ``அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமாகப் பலன் தரும். அதைப் போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது''
நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிகப் பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. ``போதுமான தூக்கம் இல்லாதவர்களால் எடையை குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது' என்று ஆகிவிடுவார்கள்''
முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை எப்பொழுதும் உங்கள் உடல்நிலையைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாலூட்டும் அன்னையரே, அதிக வலிநிவாரணி குழந்தைக்கு ஆபத்து!
» அதிக உடற்பயிற்சி ஆபத்து
» அதிக நேரம் அமர்வது உயிருக்கு ஆபத்து
» அதிக உப்பால் உடல் நலத்திற்கு ஆபத்து
» டைப் 1 நீரிழிவா? அதிக ஆபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum