தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வளையும் தன்மை தரும் உடற்பயிற்சி

Go down

வளையும் தன்மை தரும் உடற்பயிற்சி Empty வளையும் தன்மை தரும் உடற்பயிற்சி

Post  meenu Thu Jan 31, 2013 4:53 pm

காலையில் எழுந்ததும் உங்கள் வீட்டு நாய் உடலை நீட்டி நெளிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு நாளைத் தொடங்கும் முன்னர் உடலை நீட்டி நெளிப்பது எல்லா விலங்கினங்களுக்கும் பொதுவானது. அவசியமானதும் கூட. மனிதர்கள் இதற்கு விதி விலக்கல்ல. உடல் வளையும் தன்மை மிகவும் இன்றியமையாதது.

எலும்புகளை இணைக்கும் குறுத்தெலும்புகள், முதுகெலும்பு ஆகியன ஆரோக்கியமாக இருக்கவும், உடலில் எல்லா பகுதிக்கும் இரத்த ஓட்டம் பெறவும் வளையும் தன்மை அவசியமாகிறது. கொஞ்சம் கூட வளைந்து கொடுக்க முடியாத மனிதனைப் பாருங்கள். ஒரு ரோபோவைப் போலவே நடக்க வேண்டியிருக்கும். அன்றாட வேலைகளைக் கவனிக்க நல்ல வளையும் தன்மை இருக்க வேண்டும். அதிக உடல் பருமன் உள்ளவர்கள் குனிந்து தரையில் உள்ள பொருட்களை எடுக்க முடியாது. ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் வளையும் தன்மை உள்ளது.

நாம் தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் தான் குறுத்தெலும்புகள், முதுகெலும்புகளுக்கும் வளையும் தன்னையும், ஆரோக்கியமும் ஏற்படும். வயதான காலத்தில் குறுத்தெலும்புகள், முதுகெலும்பில் எந்த பிரச்சனையும் இருக்காது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum